வெள்ள நேரத்தில் ராகுல் வந்தார், கருணாநிதி வந்தார், ஜெயலலிதா வந்தாரா?: இளங்கோவன்
திருவாரூர்: சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட மகக்ளை சந்திக்க டெல்லியில் இருந்து ராகுல் காந்தி வந்தார், கோபாலபுரத்தில் இருந்து கருணாநிதி வந்தார் முதல்வர் ஜெயலலிதா மக்களை கண்டுகொள்ளவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,
முதல்வர் ஜெயலலிதா மக்களை சந்திக்காதவர். மக்களை சந்தித்து பேசாத அவருக்கு எப்படி மக்களின் பிரச்சனைகள் தெரியும். சென்னை செம்பரம்பாக்கம் ஏறி திறந்துவிடப்பட்டபோது பெருவெள்ளம் ஏற்பட்டது.
ஜெயலலிதாவோ மக்களை சந்திக்க வரவில்லை. ஆனால் திமுக தலைவர் கருணாநிதி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
ஏன், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து மக்களுக்கு ஆறுதல் கூறினார். ஆனால் இங்கிருக்கும் ஜெயலலிதா மட்டும் வரவில்லை. ஏன் அவர் வரவில்லை என்றார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications