சம்பந்தி வீட்டில் 1 கோடியைப் பதுக்கிய அதிமுக வேட்பாளர்... பறிமுதல் செய்த பறக்கும் படை
ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டசபைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வி.டி.சிவசுப்பிரமணியம் என்பவர் தனது சம்பந்தி வீட்டில் ரூ. 1 கோடியைப் பதுக்கி வைத்திருந்தார். ஆனால் பறக்கும் படையினர் அதை கண்டுபிடித்து போய் பறிமுதல் செய்து விட்டனர்.
மொடக்குறிச்சி வேட்பாளர் சிவசுப்பிரமணியத்தின் சம்பந்தி பாலசுப்பிரமணியம் - சித்திராதேவி தம்பதி. இவர்கள் கணபதிபாளையம் ராம்நகரில் வசித்து வருகிறார்கள். பாலசுப்பிரமணியம் வீட்டில் சிவசுப்பிரமணியம் பணம் பதுக்கியிருப்பதாக ரகசிய தகவல் தேர்தல் கமிஷனுக்கு போக, நேற்று மாலை 5 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரி சுப்பிரமணியம், தேர்தல் பறக்கும்படை அதிகாரி ஷியாம் சுந்தர் தலைமையில் அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

இந்த அதிரடி சோதனையில் ரூ. 1 கோடிக்கு பணம் சிக்கியது. இதற்கு பாலசுப்பிரமணியிடம் கணக்கு இல்லை. இதையடுத்து இந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.
பாலசுப்பிரமணியம் இத்தனைக்கும் தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை பார்ப்பவர் ஆவார். அவர் வீட்டுக்கு யாரும் வர மாட்டார்கள் என நினைத்து அங்கு கொண்டு போய் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர். ஆனால் பறக்கும் படையினர் சரியாக மோப்பம் பிடித்து வந்து பறிமுதல் செய்து சென்று விட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications