44 ஆண்டுகால பயணத்தில் 2-வது முறையாக முடங்கி மீண்டு எழுந்த இரட்டை இலை சின்னம்!
7 முறை அதிமுகவை அரியாசனத்தில் அமர வைத்த இரட்டை இலை சின்னம் 2-வது முறையாக முடங்கி மீண்டும் உயிர்ப்போடு எழுந்திருக்கிறது.
Recommended Video

சென்னை: தமிழக அரசியலில் கை சின்னம், உதயசூரியனைப் போல நிலைத்து நிற்கும் இரட்டை இலை சின்னத்துக்கு வயது 44. கடந்த 8 மாதங்களாக முடங்கிக் கிடந்த இரட்டை இலை சின்னம் இப்போது முதல்வர் எடப்பாடியார் அணிக்கே என தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து அதை மீண்டும் உயிர்ப்பிக்க வைத்திருக்கிறது.
1972-ம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய நிலையில் திண்டுக்கல் லோக்சபா இடைத் தேர்தல் 1973-ம் ஆண்டு வருகிறது. அப்போது மதுரை மாவட்டத்தில் இருந்தது திண்டுக்கல்.
அதிமுகவுக்கான சின்னம் கேட்டு விண்ணப்பிக்கிறார் வேட்பாளர் மாயத்தேவர். மொத்தம் 16 சின்னங்கள் மாயத்தேவரிடம் காண்பிக்கப்படுகிறது. அதில் இரட்டை இலை சின்னத்தைத் தேர்வு செய்து எம்ஜிஆரிடம் கொடுக்கிறார் மாயத்தேவர். அத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் மாயத்தேவர் அமோக வெற்றி பெற்று திமுகவை அதிர வைத்தார்.

மும்முறை ஆட்சி
இதனைத் தொடர்ந்து 1977, 1980, 1984 சட்டசபை பொதுத்தேர்தல்களில் இரட்டை இலை சின்னம் அதிமுகவை அரியாசனத்தில் தொடர்ந்து அமர வைத்தது. இரட்டை இலை சின்னம் மூலமாக எம்ஜிஆர் 3 முறை ஆட்சியைப் பிடித்தார்.

முடக்கிய கோஷ்டி பூசல்
எம்ஜிஆர் உயிருடன் இருந்த போது எஸ்டிஎஸ் போன்றவர்கள் கலகக் குரல் எழுப்பினார்கள். ஆனால் அதிமுகவும் இரட்டை இலை சின்னமும் முடங்கிப் போகவில்லை. எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக ஜானகி, ஜெயலலிதா அணிகளாக உடைய இரு அணிகளுமே இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரின.

மீண்டும் இணைப்பு
இதனால் 1988-ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் முதல் முறையாக முடக்கப்பட்டது. 1989 தேர்தலில் அதிமுக அணிகள் இரட்டைப் புறா, சேவல் சின்னங்களில் போட்டியிட்டன. இத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவின் இரு அணிகளும் ஜெயலலிதா தலைமையில் இணைய மீண்டும் இரட்டை இலை சின்னம் அதிமுக வசமானது. 1991, 2001, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.

மீண்டும் உரிமை கோரல்
தமிழகத்தில் அதிமுக மொத்தம் 7 முறை ஆட்சி அமைக்க அடித்தூணாக இருந்தது இரட்டை இலை சின்னம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மீண்டும் அதிமுக சிதைந்து போனது. ஆர்கே நகர் தொகுதி தேர்தலில் ஓபிஎஸ் அணியும் சசிகலா அணியும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோர அது முடக்கப்பட்டது.

விசாரணைகள் நிறைவு
இதன்பின்னர் எடப்பாடி தலைமையிலான அணி உதயமாகி சசிகலா கோஷ்டி வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து ஓபிஎஸ்-எடப்பாடி அணி இணைந்து இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரினர். இன்னொரு பக்கம் சசிகலா அணியும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரினர்.

இரட்டை இலை எடப்பாடியாருக்கே
இன்று தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அணிக்கே இரட்டை இலை சின்னம் என தீர்ப்பளித்தது தேர்தல் ஆணையம். தமது 44 ஆண்டுகால பயணத்தில் 2-வது முறையாக முடங்கி மீண்டும் உயிர்ப்புடன் எழுந்து நிற்கிறது இரட்டை இலை சின்னம்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications