அதிமுக விதிகளில் மாற்றம் கூடாது.. தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்த ஓபிஎஸ் ஆதரவாளர் கே.சி.பழனிச்சாமி
அதிமுக விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: அதிமுக விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இரட்டை இலைச்சின்னத்தைப் பெற ஈபிஎஸ், ஓபிஎஸ்,தினகரன் ஆகியோர் தீயாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிவு செய்யவேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து சின்னம் மற்றும் கட்சி தொடர்பாக ஆவணங்களை தாக்கல் செய்ய நேற்றே கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பு நேற்று மினி லாரியில் தேர்தல் ஆணையத்தில் பெட்டி பெட்டியாக ஆவணங்களை தாக்கல் செய்தது.

6 மாதத்தில் தேர்தல்
இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற முறையில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். அதில் அடுத்த 6 மாதத்துக்குள் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

எந்த மாற்றமும் செய்யக்கூடாது
அதிமுகவின் விதிமுறைகளில் தேர்தல் ஆணையம் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அதிமுக அடிப்படை உறுப்பினர்களின உரிமைகளை தேர்தல் ஆணையம் காக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்புக்கு
இரட்டை இலைச் சின்னத்தை ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்புக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கேசி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியே கிடையாது என ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றினர்.

தீர்மானத்துக்கு எதிராக
இந்நிலையில் அந்த தீர்மானத்துக்கு எதிராக கேசி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். கேசி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications