தமிழகமே எதிர்பார்க்கும் ஆர்கே நகர் தொகுதிக்கு மே மாதம் இடைத்தேர்தல்?
தமிழகமே எதிர்பார்த்திருக்கும் ஆர்கே நகர் தொகுதிக்கு மே மாதம் இடைத்தேர்தல் நடைபெறக் கூடும் என்கின்றன தேர்தல் ஆணைய வட்டாரங்கள்.
சென்னை: ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு மே மாதம் இடைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு முதல்வரானார் ஜெயலலிதா. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா காலமானார்.

ஜூன் 5-க்குள் தேர்தல்
இதைத் தொடர்ந்து ஆர்.கே. நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கு ஜூன் 5-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

மே மாதம் தேர்தல்?
இந்த நிலையில் வரும் மே மாதம் ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறக் கூடும் என்கின்றன தேர்தல் ஆணைய வட்டாரங்கள். இத்தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிட வேண்டும் என ஆர்கே நகர் அதிமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

சசிக்கு அக்னி பரீட்சை
அதிமுக தரப்பில் எம்ஜிஆர் உறவினர்களில் ஒருவரையோ அல்லது டிடிவி தினகரனையோ நிறுத்தலாம் என ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். ஜெயலலிதா 2 முறை வென்ற தொகுதி என்பதால் எப்படியும் வெல்ல வேண்டிய நெருக்கடியில் அதிமுக இருக்கிறது. குறிப்பாக அதிமுக பொதுச்செயலராகிவிட்ட சசிகலாவுக்கு இது அக்னி பரீட்சைதான்.

திமுக வியூகம்
அதேநேரத்தில் திமுகவோ பலவீனமாக இருக்கும் அதிமுகவை எளிதாக வெல்ல முடியும் என கணக்குப் போட்டு காத்திருக்கிறது. ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பில் கட்சிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமே காத்திருக்கிறது!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications