ஜெயலலிதா படம் ஒட்டியிருந்த ஹெல்மெட், குக்கர்கள் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி
திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஓமந்தூரில் சவுக்கு தோப்பில் பதுக்கி வைத்திருந்த ஹெல்மெட் மற்றும் குக்கர்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திண்டிவனம் அருகே ஓமந்தூரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியின் பின் பகுதியில் உள்ள சவுக்கு தோப்பில் தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஹெல்மெட், குக்கர்கள் போன்ற பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பறக்கும் படை அதிகாரி யுவராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஹெல்மெட், குக்கர் ஆகியன ஆங்காங்கே சிதறி கிடந்தன. அவை அனைத்திலும் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அங்குகிடந்த 189 ஹெல்மெட், 21 குக்கர் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து திண்டிவனத்தில் உள்ள கருவூலத்தில் வைத்தனர்.
தேர்தலின் போது வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக இவை குவித்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்றும், அதிகாரிகள் வருவதை அறிந்து அங்கிருந்தவர்கள் பொருட்களை போட்டுவிட்டு தப்பி ஓடி இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் தொடர்புடையவர்கள் யார்? யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications