For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வர் கனவில் இருக்கும் சசிகலாவுக்கு நெருக்கடி- தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ்!

அதிமுக பொதுச்செயலர் நியமனம் தொடர்பாக விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் முனைப்பாக இருக்கும் சசிகலாவுக்கு அதிமுக பொதுச்செயலர் பதவி நியமனம் குறித்து விளக்கம் கோரி தேர்தல் ஆணையம் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலா, அதிமுக பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். அவர் இன்னமும் முறைப்படி பொதுச்செயலராக 'தேர்வு' செய்யப்படவில்லை.

Election Commission slaps notice to Sasikala

ஆனால் தேர்தல் ஆணையத்திடம் தாம் பொதுச்செயலராகிவிட்டதாக கடிதம் கொடுத்திருந்தார் சசிகலா. அவரது இந்த கடிதத்தை நிராகரிக்க கோரி அதிமுக ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருந்தார்.

அதில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு சசிகலா நடராஜனை பொதுச்செயலராக தேர்வு செய்யவில்லை. ஆகையால் சசிகலா நடராஜனின் நியமனத்தை தேர்தல் ஆணையம் ஏற்க கூடாது; தேர்தல் ஆணையமே அதிமுக பொதுச்செயலர் தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இப்புகாரின் அடிப்படையில் சசிகலாவிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

English summary
Election Commission of India sent notice to Sasikala who appointed as General Secretary of ADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X