”தட்டு வாங்கினேன் பிரியாணி வாங்கலை”- களைக்கட்டும் தேர்தல் கூத்து
சென்னை: நெருங்கிவரும் தேர்தல் நேர பிரச்சாரங்களில் அரசியல் தலைவர்கள் பரபரப்பாக இருந்தாலும் ஒருபக்கம் தொண்டர்களின் சிரிக்க வைக்கும் செயல்களும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.
நாளுக்கு நாள் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஜுரம் அதிகரித்து கொண்டுதான் வருகின்றது.
ஆனாலும்,கொளுத்தும் வெய்யிலும்,தேர்தல் தீக்கும் ஆதரவாய் இருக்கின்றது இது போன்ற சின்ன சின்ன ஜில்லிப்பு விஷயங்கள்.

பிரியாணி வாசனை வருதுடோய்:
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற காங்கிரஸ் செயல் வீரர்கள் பொதுக்கூட்டத்தில் பிரியாணி கேட்க போய்,தக்காளி சாதம் கிடைத்ததால் நொந்து போய் உள்ளனர் தொண்டர்கள்.பொதுக்கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போதே உணவு வேளை வந்ததால் எங்கே பிரியாணி கிடைக்காமல் போய்விடுமோ என்று வேகவேகமாக பொதுக்கூட்ட பேச்சை கூட விட்டுவிட்டு சென்றனர்.

கிடைச்சது வச்சு சந்தோஷப்படு:
ஆனால்,தட்டில் விழுந்ததென்னவோ தக்காளி சாதமும்,தயிர் சாதமும்தான்."சத்தியமா மச்சான்,பிரியாணி வாசனை வந்துச்சுடா" என்றவாறே புலம்பிக்கொண்டே தொண்டர்கள் சாப்பிட்டனர்.

இன்னைக்கு தலையில எழுதியது தக்காளிதான் போல:
சாப்பிட்டு விடடு, "கடவுள் இன்னைக்கு நமக்கு தக்காளிசாதம்தான் தலையில எழுதி இருக்கார்" என்று தங்களுக்கு தாங்களே ஆறுதல் சொல்லிக் கொண்டது தனிக்கதை.

காதிலேயே போட்டுக் கொள்வதில்லை:
குழந்தைகளை தேர்தல் பிரச்சாரங்களுக்கு ஈடுபடுத்த கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தாலும்,தொண்டர்கள் அதனை எல்லாம் காதிலேயே போட்டுக் கொள்வதில்லை.

இது 'குட்டி' ஸ்பெஷல்:
சென்னையில் நடைபெற்ற பல்வேறு தேர்தல் கூட்டங்களில் சின்ன சின்ன சிறார்களின் குத்தாட்டம்தான் ஹைலைட் ஆக இருந்தது.இந்த வயதிலேயே சில்லுவண்டுகள் செய்த தேர்தல் பிரச்சார நடனத்தால் கிறுகிறுத்து போய் உள்ளனர் சீனியர் தொண்டர்கள்.

அம்மா தாயே சத்தியமா நாந்தான் அமைச்சர்:
பெரம்பலூரில் லோக்சபா வேட்பாளரான மருதராஜா கலெக்டர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.பெரம்பலூர் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, அமைச்சர் பூனாட்சி உட்பட அனைவரையும் அடையாளம் தெரியாமல் விசாரித்து,விசாரித்துதான் உள்ளேயே அனுப்பினார்.

நாங்க பாவம்பா:
"திமுக ஆட்சினா நிரந்த அமைச்சர்கள் அடையாளம் தெரியும்.நாங்க பாவப்பட்டவங்க.வேளைக்கு ஒரு தடவை பதவி மாறினா இப்படிதான்.போற போக்கை பார்த்தா அரசாங்க அதிகாரிகளுக்கு கூட எங்களை அடையாளம் தெரியாம போய்டும்" என்று ரத்தத்தின் ரத்தங்கள் புலம்பியது யார் காதிலும் விழுவதற்கு வாய்ப்பில்லைதான்.

வாங்க வாங்க தேர்தல் தோசை
"மசால் தோசை சாப்ட்ருப்பீங்க,வெங்காய தோசை சாப்டுருப்பீங்க அதிமுக,திமுக தோசை சாப்ட்டு இருக்கீங்களா? "என்று கூவி கூவி விற்றுக்கொண்டிருக்கிறார்கள் சென்னையில்.
இலை தோசை.. கை தோசை..சூரிய தோசை:
இரட்டை இலை வடிவிலான தோசை,உதய சூரியன் தோசை, கை போன்ற தோசை என்று உணவங்களின் பாடுதான் தற்போது கொண்டாட்டமாக இருக்கின்றது.












Click it and Unblock the Notifications