19 வயது கல்லூரி மாணவரிடம் ரூ. 52 லட்சம் 'கேஷ்'... பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள்!
சென்னை: சென்னையிலிருந்து ராமநாதபுரத்திற்குச் சென்ற ஆம்னி பஸ்சில் பயணித்த கல்லூரி மாணவரிடம் ரூ. 52 லட்ச்ம் பணம் இருந்தது தேர்தல் கால வாகன சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டு அது பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தல் காலம் என்பதால் தமிழகம் முழுவதும் வாகன சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது. அனுமதி அளிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பணம் எடுத்துச் சென்றார் போலீஸார் பறிமுதல் செய்து விடுகின்றனர். மேலும் உரிய ஆவணங்களைக் காட்டாவிட்டால் இந்தப் பணத்தைத் திரும்பப் பெறவும் முடியாது.

இந்த நிலையில், நேற்று மணலியில் இருந்து ராமநாதபுரத்துக்கு ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 11.30 மணியளவில் இந்த பஸ் மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி. ரோட்டில் சென்றபோது, தேர்தல் பறக்கும் படை அதிகாரி செல்வின், சப்- இன்ஸ்பெக்டர் சத்தியன், போலீஸ்காரர்கள் பெரியசாமி, செந்தில் ஆகியோர் அந்த பஸ்சை நிறுத்தினார்கள். பஸ்சில் இருந்த பைகள், பெட்டிகள் ஆகியவற்றை சோதனை செய்தார்கள்.
அப்போது ஒரு வாலிபரின் சீட்டின் கீழே அட்டைப்பெட்டி ஒன்று இருந்தது. அதை சோதித்தபோது அதன் உள்ளே ஆயிரம், 500 ரூபாய் கட்டுக்களாக ரூ. 52 லட்சத்து 30 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 90 செல்போன்கள் இருந்தன.
அந்த அட்டைப்பெட்டியை முகமது சஸ் ரீத் (19) என்பவர் கொண்டு சென்றது. தெரிய வந்தது. சென்னை ஏழு கிணறைச் சேர்ந்தவர். சஸ் ரீத்துடன் அவரது நண்பர் அக்னேஷ் (17) என்பவரும் இதே பஸ்சில் சென்றுள்ளார்.
பணம் நிரம்பிய அட்டைப் பெட்டியுடன் சிக்கிய முகமது சஸ்ரீத், அக்னேஷ் இருவரும் கல்லூரி மாணவர்கள். சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்கள். பணத்துக்கான ஆவணம் எதுவும் இல்லை. எனவே பணம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பணமும் அதை கொண்டு சென்ற மாணவரும் மீனம்பாக்கம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுகுறித்து சஸ் ரீத்திடம் போலீஸார் விசாரித்தபோது எனக்கு என்ன என்றே தெரியாது. இந்தப் பெட்டியை எனது தந்தைதான் கொடுத்தார். பாட்டி வீட்டில் கொடுக்குமாறு கூறியிருந்தார் என்றார்.
இதையடுத்து சஸ் ரீத்தின் தந்தையைப் பிடித்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications