விஜயகாந்திற்கு போட்டியாக ‘தேர்தல் மன்னன்’... கின்னஸ் சாதனைக்காக 174வது முறை வேட்புமனுத் தாக்கல்
விழுப்புரம்: கின்னஸ் சாதனை முயற்சிக்காக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார் தேர்தல் மன்னன் பத்மராஜன்.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கோனூர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மராஜன். பஞ்சர்கடை வைத்துள்ள இவரது லட்சியம் கின்னஸில் இடம் பெறுவது. ஆனால், இதற்காக இவர் தேர்ந்தெடுத்த வழி தான் மிகவும் வித்தியாசமானது.
தேர்தலில் போட்டியிட்டு எப்படியும் பதவியைப் பிடித்தே தீர்வது என ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்து கொண்டிருக்கும் வேளையில், சாதனை முயற்சியாக அவர்களுக்குப் போட்டியாக பத்மராஜனும் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகிறார்.
இதுவரை 173 முறை வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள இவரை, தேர்தல் மன்னன் என்றே மக்கள் குறிப்பிடுகின்றனர்.

174வது முறை...
இந்நிலையில், நேற்று 174வது முறையாக உளுந்தூர்பேட்டையில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார் பத்மராஜன். தேர்தல் நடத்தும் அலுவலர் முகுந்தனிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தபின், செய்தியாளர்களிடம் பேசிய பத்மராஜன், "பிரதமர் நரேந்திர மோடி, மன்மோகன் சிங், வாஜ்பாய், நரசிம்ம ராவ் என நான்கு முறை பிரதமர்களை எதிர்த்தும், கருணாநிதி, ஜெயலலிதா, எடியூரப்பா, குமார சாமி உட்பட 12 முறை முதல்வர்களை எதிர்த்தும் போட்டியிட்டு உள்ளேன்.

கின்னஸ் முயற்சி...
தற்போது, 174வது முறையாக, உளுந்துார்பேட்டை சட்டசபை தொகுதியில் மனு தாக்கல் செய்கிறேன். ஓட்டு சேகரிக்க பொதுமக்களை சந்திக்கப் போவதில்லை. மனு தாக்கல் செய்வது, கின்னஸ் சாதனைக்காக மட்டுமே. உளுந்துார்பேட்டை தொகுதியில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடுவதால் இங்கும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளேன்' என்றார்.

மாற்றத்திற்கு காரணமானவர்...
கடந்த 1996ம் ஆண்டு இவர் ஒரே சமயத்தில் 5 மாநிலங்களில் 8 தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால், சுயேச்சை வேட்பாளர்களை கட்டுப்படுத்த ஒருவர் இரண்டு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை வகுக்கப்பட்டது. இதேபோல, வைப்பு தொகையும் அதிகரிக்கப்பட்டது.

லிம்கா சாதனை...
இவரின் இந்த தொடர் தோல்வி லிம்கா சாதனை புத்தகத்தில் 3 முறை இடம் பெற்றுள்ளது. தற்போது கின்னஸ் சாதனைக்காக தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல் செய்து வருகிறார்.

ரூ. 20 லட்சம்...
வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதையே இவர் லட்சியமாகக் கொண்டுள்ளார். இதுவரை வேட்புமனுத் தாக்கலுக்கு என்று மட்டும் ரூ. 20 லட்சத்திற்கும் அதிகமாக இவர் செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications