மிரட்டிய போதமலை.. வரலாற்றிலேயே முதல் முறையாக வாகனங்களில் EVM-யை எடுத்து சென்ற அதிகாரிகள்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே போதமலையில் உள்ள கிராமங்களுக்கு வரலாற்றிலேய முதல் முறையாக சாலை வழியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் போதமலை என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு தனித்தனியாக 3 கிராமங்கள் உள்ளன. கீழுர், மேலூர், கெடமலை என்பது தான் அந்த கிராமங்களின் பெயர்களாகும். இந்த பகுதிகள் ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்டு உள்ளன.

இந்த போதமலையில் உள்ள கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாமல் இருந்தது. இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் போதை மலையில் வசிக்கும் மக்கள் வாக்களிக்கும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பிற தேர்தல் உபகரணங்கள் தலைச்சுமையாக எடுத்து செல்லப்படும்.
அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நீண்ட தூரம் வனப்பகுதி வழியாகச் சுமந்து சென்று வாக்குச்சாவடிக்கு செல்வார்கள். சுமார் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒற்றையடி பாதையில் நடந்து செல்ல வேண்டும். இதனால் அதிகாரிகள் அச்சத்துடன் செல்வார்கள். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இப்படி தான் அந்த கிராமங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டு வந்தது.
இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குச்சாவடி அதிகாரிகள் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். மேலும் போதைமலை கிராம மக்களும் சாலை வசதி இன்றி சிரமப்பட்டு வந்தனர். அரசு சார்பில் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என்று கூறி வந்தனர். தற்போது இந்த சிரமத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதாவது சமீபத்தில் அங்கு மண் சாலை அமைக்கப்பட்டது. இதையடுத்து முதல் முறையாக இந்த தேர்தலில் போதைமலைக்கு மண்சாலை வழியாக வாகனங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளன. இது தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளதுடன், அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையும் நிறைவேறியுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications