அடக்கொடுமையே.. 'அம்மா' திட்ட அரசு விழாவுக்கு கொக்கி போட்டு மின்சாரம் திருட்டு
திருவள்ளூர்: தமிழக அரசின் வருவாய் துறை சார்பில் நடத்தப்பட்ட, 'அம்மா' திட்ட முகாமில், கொக்கி போட்டு மின்திருட்டு நடந்தது கண்டு ஊர்மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
வருவாய்த் துறை சார்பில், எல்லாபுரம் ஒன்றியம், பனையஞ்சேரி ஊராட்சியில், அம்மா திட்ட முகாம் நடந்தது.

இதில், பட்டா மாற்றம், குடும்ப அட்டை, இலவச வீட்டுமனை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை கோரி, 50க்கும் மேற்பட்டோர் மனுக்கள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சி, புதிதாக கட்டப்பட்டு, திறப்பு விழா நடத்தப்படாத ஊரக வளர்ச்சித் துறை கட்டடத்தில் நடந்தது. அந்த கட்டடத்திற்கு மின் இணைப்பு பெறாததால், அருகில் இருந்த மின்கம்பத்தில் கொக்கி போட்டு மின்சாரத்தை முறைகேடாக எடுத்தனர்.
இதை பார்த்த பொதுமக்கள் தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர். கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கப்பட்டது புகைப்படத்துடன் நாளிதழ்களில் வெளியாகியுள்ளது. அரசு துறை விழாவுக்கே, அரசு மின்சாரம் திருடப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications