நடுரோட்டில் யானைக்கு “டெலிவரி” - வால்பாறையில் 7 மணி நேரம் “டிராபிக் ஜாம்”!
கோவை: கோவை மாவட்டத்தில் நடுரோட்டில் யானைக்கு பிரசவம் நடைபெற்ற காரணத்தினால் ஏழு மணி நேரம் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை தமிழகத்தின் கடைசியில் உள்ள பெரிய ஊராகும். இந்த ஊர் தமிழக, கேரள எல்லையில் உள்ளது. இங்கிருந்து சாலக்குடியில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 11.00 மணியளவில் வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் வாட்சுமரம் என்ற இடத்தில் ஒரு யானை குட்டியை ஈன்றது.
அந்த யானையை சுற்றிலும் பிற யானைகள் பாதுகாப்பாக நின்றதால் சாலையில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இதனால் அந்த வழியாக கேரளா மாநிலத்திலிருந்து வந்த சுற்றுலாப்பயணிகள் தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல் சாலையில் நின்றபடி தவித்தனர்.
குட்டியை ஈன்று அந்த குட்டி எழுந்து நின்று தாய் யானையிடம் பால் குடித்துவிட்டு அங்கிருந்து காட்டுக்குள் சென்ற பின் மாலை 6:45 மணிக்கு குட்டி யானையை அழைத்துக்கொண்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன.
இதனால் வால்பாறை , சாலக்குடி ரோட்டில் ஏழு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த வானத்துறை அலுவலர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications