"ஃபுல்" மப்பில் தூங்கிய பாகனுக்கு பக்கத்திலேயே காவல் இருந்த யானை – திருச்சியில் பரபரப்பு
திருச்சி: திருச்சியில் குடி போதையில் தூங்கிய பாகனுக்கு, அவரது யானை காவலுக்கு நின்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சேகர் என்பவருக்கு சொந்தமாக ஒரு யானை உள்ளது. இந்த யானையை திருவிழா மற்றும் விசேஷங்களுக்கு வாடகைக்கு விட்டு வருகிறார். யானையை கொள்ளிடக் கரையை சேர்ந்த சங்கர் என்பவர் பாகனாக இருந்து பராமரித்து வருகிறார் .

நேற்று இந்த யானை ஒரு விசேஷத்திற்கு சென்றது. விசேஷம் முடிந்த நிலையில் பாகன் சங்கர், யானையை அழைத்து கொண்டு ஸ்ரீரங்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது சங்கர் அளவுக்கதிமாக மது அருந்தி இருந்தார். இதனால் அவரால் நடக்கமுடியவில்லை. போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சத்திரம் அண்ணாசிலை பகுதியில் யானையுடன் சங்கர் தள்ளாடியபடி நடந்து சென்றுகொண்டிருந்தார். யானை மிரண்டு ஓடினால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் போதையில் பாகன் இருந்ததால் இதைக்கண்ட மக்கள் பீதி அடைந்தனர். உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.
அப்போது அப்பகுதியில் ரோந்து வாகனத்தில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ ஆரோக்கியசாமி அங்கு சென்று யானைப் பாகன் சங்கரிடம் விசாரணை நடத்தினார். ஆனால் அவரோ, தனது பெயரைக் கூட உச்சரிக்க முடியாத அளவிற்கு பதில் கூற முடியாமல் அவருக்கு வாய் குளறியது. இவ்வளவு பிரச்சனையிலும் யானையானது அவரை விட்டு இம்மியளவு கூட நகராமல் கூடவே அமைதியாக நின்று கொண்டிருந்தது.
இதையடுத்து யானையை அப்பகுதியில் இருந்த திருமண மண்டபத்தில் கட்டி வைத்து உரிமையாளர் சேகருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மாற்று பாகனுடன் வந்த உரிமையாளர் யானையை மீட்டு சென்றார்.
மேலும் உரிமையாளரிடம், யானையை பராமரிக்கும் பாகன் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து அறிவுரை வழங்க கோரினர். போதை தெளியாத பாகன் சங்கர், அங்கேயே படுத்து உறங்கினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications