நீலகிரியில் வாக்குச்சாவடிக்குள் புகுந்த யானை: அலறியடித்து ஓடிய அதிகாரிகள்
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி தொகுதியில் அமைக்கப்பட்ட ஒரு வாக்குச்சாவடிக்குள் யானை புகுந்ததால் தேர்தல் அதிகாரிகள் அலறியடித்து ஓடினர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுவையில் உள்ள 1 தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணிவரை நடைபெற்றது.
இந்நிலையில் நீலகிரி தொகுதிக்குட்பட்ட பந்தலூர் கண்ணிவயலில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வாக்களித்து வந்தனர். அப்போது திடீர் என்று யானை ஒன்று வாக்குச்சாவடிக்குள் புகுந்துவிட்டது. யானையைப் பார்த்த தேர்தல் அதிகாரிகளும், வாக்காளர்களும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
இது குறித்து தகவல் அறிந்த வனத் துறையினர் அங்கு வந்து யானையை விரட்டியடித்தனர். யானையால் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications