கன்னியாகுமரி : கோயில் திருவிழாவில் யானை தாக்கி பாகன் உயிரிழப்பு - பக்தர்கள் அதிர்ச்சி
கன்னியாகுமரி அருகே கோயில் விழா ஊர்வலத்தில் யானை தாக்கி பாகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி: கோயில் திருவிழா ஊர்வலத்தில் சென்ற யானை திடீரென தாக்கியதில் பாகன் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பனச்சமூடு வெள்ளச்சிபாறை அருகே உள்ளது பத்திரகாளியம்மன் கோவில். மிகவும் பிரச்சித்தி பெற்ற இக்கோவிலின் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தது.

இக்கோவில் விழாவின் ஊர்வலத்தில் பங்கேற்க செய்ய, ஆண் யானை ஒன்றினை பாகன் கபீர் 25 என்பவர் கேரளாவிலிருந்து கொண்டு வந்திருந்தார்.
விழா ஊர்வலத்தில் பக்தர்களின் மத்தியில் யானை சென்று கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மிரண்டு ஓடியது.
இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். யானையை கட்டுக்குள் கொண்டு வர பாகன் கபீர் முயற்சி செய்தார்.
ஆனால், சரமாரியாக யானை தாக்கியதில் கபீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோயில் விழா ஊர்வலத்தில் யானை மிரண்டு பாகன் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications