அடர்ந்த காட்டில் குட்டி யானைக்கு Z பிளஸ் பாதுகாப்பு! அடேய் காலை தூக்கி எங்க போடுறே! சூப்பர் வீடியோ
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் சரணாலயத்தை சுற்றியுள்ள அடர்ந்த காட்டில் யானைகள் தங்கள் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருக்கும் வீடியோவை தமிழக வனத் துறை செயலாளர் சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த புலிகள் காப்பகம் வனப்பகுதியில் அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியான இங்கு யானைகளும் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.

இங்குதான் டாப் ஸ்லிப்பும் உள்ளது. கோயில் யானைகள் ஆண்டுக்கு ஒரு முறை சில நாட்களுக்கு புத்துணர்வு பயிற்சிக்காகவும் இங்கு அழைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் யானைகள் அடர்ந்த வனப் பகுதியில் நடந்து சென்றுவிட்டு ஒரு இடத்தில் அசதியாக இருந்ததால் 4 யானைகளும் ஒரு குட்டியும் ஒரு இடத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோவைத்தான் சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் ஒரு குட்டி யானையும் இருப்பதால் பாதுகாப்பு கருதி தாய் யானை, அதன் வளர்ந்த குட்டிகள் புடைச்சூழ அந்த குட்டி யானை தூங்கிக் கொண்டிருக்கிறது. கிட்டதட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு அந்த குட்டி தூங்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் ஒரு யானை அரை குறை தூக்கத்தில் நம் கூட்டத்தினர் இருக்கிறார்களா இல்லை கிளம்பிவிட்டார்களா என்ற சந்தேகத்தில் இருந்தது போலும்!
இதற்காக தனது பின்னங்காலை தூக்கி மற்றொரு யானையின் பின்னங்கழுத்தில் வைத்துக் கொண்டது. (அப்பாடி ஆள் இருக்காங்க). இதனால் நிம்மதி பெருமூச்சுவிட்டுவிட்டு தனது தூக்கத்தை தொடர்கிறது. இந்த அழகான காட்சி மனதிற்கு இதத்தை அளிக்கிறது. உருவத்தில் பெரிதாக இருந்தாலும் இவை எப்படி குழந்தைகளாகவே இருக்கின்றன.
நாம் கூட இப்படித்தான் கும்பலாக படுத்துக் கொள்ளும்போது யாராவது இருக்காங்களா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள காலை தூக்கி போடுவது, கழுத்தை கட்டி பிடித்துக் கொள்வது போன்ற செயல்களை செய்வோம். அதே போல் இந்த யானைகளும் உள்ளன.
அது போல் அம்மா என்றாலே பாதுகாப்புதான். அந்த வகையில் அடர்ந்த காட்டில் தனது குட்டிக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் எப்படி மூளையை பயன்படுத்தி ரவுண்ட் கட்டிக் கொண்டு தூங்கின்றன! பார்ப்பதற்கு பிறந்த குழந்தையை போல் தூங்குவதாக நெட்டிசன்கள் கமெண்ட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
யானைகள் மட்டுமில்லை எந்த ஒரு விலங்கினமாக இருந்தாலும் அது குழந்தை போல்தான் இருக்கும். இதில் ஒருவர் அந்த யானைகள் அப்படித்தான் தூங்குமா இல்லை மறுபக்கமும் ஒருகணித்து படுக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார். உணவை தேடியோ தண்ணீரை தேடியோ எவ்வளவு தூரம் அலைந்தார்களோ இப்படி அசதியாக இருக்கிறார்களே என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications