பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவுக்கு கெடு.. பறந்த நோட்டீஸ்.. கொடைக்கானலில் என்ன நடக்கிறது?
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டிய விவகாரத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவுக்கு ஊராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஒருவாரத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலம் ஆகும். மிக அமைதியான அழகிய சுற்றுலா தலங்களை கொண்ட இந்த பகுதியில் அவ்வளவு எளிதாக சொகுசு பங்களாக்களை கட்டிவிட முடியாது. பல கட்டுப்பாடுகள் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் அதிகம் உள்ள பகுதியாகும்.

ஊட்டி போல் தேயிலை தோட்டங்கள் உள்ள பகுதி இல்லை. மலை சார்ந்த காடுகளில் தான் இயற்கையாகவே விவசாயம் இருக்கும். பசுமை பாலைவனங்களை (தேயிலை தோட்டங்கள்) பார்க்கவே முடியாது. முழுமையாக இயற்கை அன்னை அப்படியே உள்ள பகுதி.
ஆண்டு தோறும் குளுகுளு காலநிலை உள்ள பகுதியாகும். எந்த ஒரு சர்ச்சையும் இல்லாத மிக அமைதியான பகுதியும் கூட.. இதனால் பணக்காரர்கள் பலர் கொடைக்கானலில் வீடுகள் அல்லது நிலம் வாங்கி போட்டுள்ளார்கள். அந்த வகையில் தான் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் இடம் வாங்கி வீடு கட்டி உள்ளனர். ஆனால் ஊராட்சியின் அனுமதி இல்லாமல் கட்டிடங்கள் மற்றும் சாலை அமைத்ததாக புகார்கள் உள்ளூர் மக்களால் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேத்துப்பாறை கிராம தலைவர் மகேந்திரன் புகார் கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான பிறகு, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
பேத்துப்பாறை கிராம தலைவர் மகேந்திரன் கூட்டத்தில் கூறும் போது, கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறையில் நடிகர் பாபி சிம்ஹாவும், பாரதி அண்ணாநகரில் நடிகர் பிரகாஷ்ராஜூம் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டி வருவதாகவும், பிரகாஷ்ராஜ் சிமெண்ட் சாலை அமைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
பேத்துப்பாறை கிராம தலைவர் மகேந்திரனின் புகாரின் பேரில், வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், நடிகர்கள் கட்டி வரும் கட்டிடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதில் நடிகர் பாபி சிம்ஹா அவரது தாய் கிருஷ்ணகுமாரி பெயரில் கடந்த 2019-ம் ஆண்டு 2,500 சதுர அடி நிலம் வாங்கி கட்டிடம் கட்டி உள்ளார்.அதில், கட்டிடம் கட்டுவதற்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது தெரியவந்தது. ஆனால் கட்டிடம் கட்ட உரிய காலம் முடிவடைந்த பின்னரும் கட்டிடம் கட்டி முடிக்கப்படாத நிலையில், கூடுதல் நிலத்தில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாபி சிம்ஹாவின் தந்தை ராமகிருஷ்ணனிடம் வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதேபோல் பாரதி அண்ணாநகரில் நடிகர் பிரகாஷ்ராஜ் எந்தவித அனுமதியும் இன்றி கட்டிடம் கட்டியதுடன், அந்த கட்டிட பகுதிக்கு செல்ல சாலை அமைத்ததும் ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோருக்கு வழங்கப்பட்ட நோட்டீசில், கட்டிட அனுமதி இன்றி புதிய வீடு கட்டப்பட்டு வருவதாக தெரிய வருகிறது என்றும், எனவே அதற்கான அனைத்து ஆவணங்களையும் ஒருவார காலத்துக்குள் வில்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் உள்ளாட்சி சட்ட விதிகள்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications