Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நியாயவான் பிரகாஷ் ராஜ் ஆக்கிரமிப்பு செய்யலாமா.. கொடைக்கானலில் பங்களா கட்டும் பாபி சிம்ஹா.. குமுறல்

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்: பிரபல நடிகர்கள் சட்டத்திற்கு புறம்பாக அரசு விதிமுறைகளை மீறி சொகுசு பங்களா கட்டுவதாகவும், கொடைக்கானல் சுற்றுவட்டாரா கிராமங்களில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து சிமெண்ட் சாலை அமைப்பதாகவும் கிராம மக்கள் புகார் கூறியுள்ளனர். நடிகர்களின் அத்துமீறலை வனத்துறையினர் கண்டு கொள்ளாமல் விட்டது எப்படி என்றும் கிராமத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா. நடிப்பு மட்டுமல்லாது அரசியலும் பேசி அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார் பிரகாஷ் ராஜ். மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான விமர்சனங்கள் முன் வைத்து பதிவிடுவார் பிரகாஷ் ராஜ்.

Encroachment in Kodaikanal Cement Road, Luxury Bungalow Complaint against Prakash Raj, Bobby Simha

சமீபத்தில் அவரது பதிவு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ், நிலவில் இருந்து விக்ரம்லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம் எனக் குறிப்பிட்டு, அதில் தேநீர் ஆற்றும் ஒருவரின் கேலிச்சித்திரத்தை பதிந்து கேலி செய்திருந்தார்.

இதற்கு கடும்விமர்சனங்கள் டிவிட்டரில் எழுந்தது. தேச துரேகி என்றும் பலரும் பிரகாஷ் ராஜை திட்டித்தீர்த்தனர். இந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் அதில் ஒரு புதிய டிவிட்டையும் இணைத்துள்ளார். அந்த டிவீட்டில் கூறியுள்ளதாவது, வெறுப்பாக பார்த்தால் அனைத்தும் வெறுப்பாகவே பார்க்கப்படும் என்றும், நான் இந்த நகைச்சுவையினை நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் கால நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அவர், நான் கேரளாவின் தேநீர் கடைக்காரர்களை கொண்டாடினேன் என்றும்,இந்த கேரளா தேநீர் கடைக்காரர்கள் குறித்த நகைச்சுவையினை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையென்றால், அதுதான் நகைச்சுவை எனவும் கூறியுள்ளார். மேலும், வளருங்கள்...சும்மா சொல்கிறேன் எனவும் கிண்டலடித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க கொடைக்கானலில் கிராம மக்கள் பயன்படுத்தும் மலை கிராம சாலையை ஆக்கிரமித்து தனது பிரத்யேக பங்களாவிற்கு பிரகாஷ் ராஜ் சாலை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேத்துப்பாறை பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தனக்கு சொந்தமாக சாலை அமைத்துக்கொண்டார் பிரகாஷ் என்று கிராம மக்கள் புகார் கூறியுள்ளனர். அது பொது வழி அல்ல என்று போர்டு வைத்தமாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மக்களின் கொந்தளிப்பை அடுத்து அந்த போர்டு அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Encroachment in Kodaikanal Cement Road, Luxury Bungalow Complaint against Prakash Raj, Bobby Simha

கொடைக்கானலில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசிய விவசாயிகள், விவசாய பணிக்கு ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்த வனத்துறையோ, மாவட்ட நிர்வாகமோ அனுமதி வழங்குவதில்லை, அதே நேரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த 25 நாட்களாக கனரக வாகனத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியது எப்படி? என்று ஆதாரத்துடன் கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க அரசு தரிசு நிலத்தை ஆக்கிரமித்து நடிகர் பாபி சிம்ஹா மூன்று மாடி சொகுசு பங்களா கட்டி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை வனத்துறையினர் கண்டு கொள்ளாமல் விட்டது எப்படி என்றும் கேள்வி எழுப்பிய கிராமக்கள் கொந்தளிப்பாகவே பேசினர். அரசு நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்ட அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்வதாக கூறியுள்ளனர். உலக நியாயம் பேசும் பிரகாஷ் ராஜ் இது போல ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபடலாமா என்று நெட்டிசன்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+