புதுச்சேரி: என்ஜீனியரிங் கல்லூரி மாணவி கல்லூரி மாடியிலிருந்து குதித்து தற்கொலை!
புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி, சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் வினோதினி (18). இவர், கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகர் தொழிற்நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவி வினோதினி, கல்லூரியின் 4வது மாடிக்கு சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த சக மாணவ- மாணவிகள் அவரை தடுக்க முயன்றுள்ளனர்.
ஆனால், மாணவர்கள் மாடிக்கு செல்வதற்குள் வினோதினி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து திருபுவனை காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காதல் விவகாரமா, வீட்டில் பிரச்னை என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், மாணவியின் தோழிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications