சென்னை: கேரம் விளையாட்டில் தகராறு- இளைஞரை குத்திக் கொன்ற நண்பர்
சென்னை: சென்னையில் கேரம் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் நண்பரால் இளைஞர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த எண்ணூர் கமலம்மாள் நகரைச் சேர்ந்தவர் ரத்தினம் (21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாலா (20) என்ற நண்பருடன் திங்களன்று இரவு கேரம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது.

பாலாவுக்கு ஆதரவாக காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த விமல் மற்றும் சிலரும்,, ரத்தினத்திற்கு ஆதரவாக அவரது தம்பி முனியாண்டி, பிரபாகர் மற்றும் சிலரும் வந்துள்ளனர். இருதரப்பைச் சேர்ந்தவர்களும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். அப்போது பாலாவுக்கு ஆதரவாக வந்த விமலின் வயிற்றில் ரத்தினம் கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே விமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எண்ணூர் போலீசார், முனியாண்டி, பிரபாகர் ஆகியோரைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரத்தினத்தைத் தேடி வருகின்றனர்.
கேரம் விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறால் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications