விவசாயிகளின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும் என உறுதியேற்போம்: வேல்முருகன்
தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், புத்தாண்டிலாவது விவசாயிகளின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும் என உறுதியேற்போம் என புத்தாண்டு வாழ்த்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்த புத்தாண்டிலாவது விவசாயிகளின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும் என உறுதியேற்போம் என புத்தாண்டு வாழ்த்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புத்தாண்டிலாவது பொருளாதார நெருக்கடி நீங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் 'தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வறட்சியையும் இயற்கை பேரிடரையும் ஒருசேர தந்த 2016-ம் ஆண்டு நம்மிடமிருந்து விடைபெறுகிறது; தமிழகம் இதுவரை கண்டிராத பெரும் வறட்சியை எதிர்கொண்டிருக்கும் சூழல் உதயமாகிறது புத்தாண்டு.

நாடு இதுவரை எதிர்நோக்காத பொருளாதார நெருக்கடியை 2016-ம் ஆண்டு நமக்கு தந்தது. வரும் புதிய ஆண்டிலாவது இத்தகைய நெருக்கடி நீங்கி இயல்பு வாழ்க்கை திரும்பிட வேண்டும்.தமிழகத்தின் பல பகுதிகளிலும் விவசாயிகள் மாண்டுபோகும் பெரும் துயரம் 2016-ம் ஆண்டின் இறுதிநாட்களில் அடுத்தடுத்து நடந்தேறுகிறது.
இத்துயரம் தோய்ந்த சூழலில் பிறக்கும் புதிய ஆண்டிலாவது தமிழகத்து நதிநீர் உரிமைகள் காப்பாற்றப்பட்டு விவசாயிகளின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும் என உறுதியேற்போம்.தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடித்த சிங்கள அரசு அவற்றை அரசு உடைமையாக்கிவிட்டதாக அறிவிப்பு வந்துள்ள நிலையில்தான் புதிய ஆண்டை எதிர்கொள்கிறோம்.
பிறக்கும் புதிய ஆண்டில் நமது தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமை பகுதிகளில் சுதந்திரமாக எவ்வித அச்சுறுத்தலுமின்றி கடலுக்கு சென்று திரும்பிடும் இயல்பு நிலை உருவாகிட வேண்டும். புதிய 2017-ம் ஆண்டில் தமிழகத்தின் வாழ்வுரிமைகளை மீட்டெடுக்க நாம் ஆக்கப்பூர்வமாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என உறுதியேற்போம். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்! இவ்வாறு வேல்முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications