சவுதியில் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட், பாமக வலியுறுத்தல்

இது தொடர்பாக ஜி.ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
முறையான பிரயாண ஆவணங்களும், நிச்சயிக்கப்பட்ட வேலையும் இல்லாமல் சவுதி அரேபியாவில் குடியிருக்கும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரை, அவரவர்களின் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
உள்ளூர் அரேபிய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க மேற்படி நடவடிக்கையில் இறங்கிய சவுதி அரசு ஏழு மாதங்களுக்கு முன்னர் தனது ‘நிதாகத் சட்டம் ' மூலம் முறையான ஆவணங்களின்றிப் பணிபுரிவோரைத் திருப்பி அனுப்ப முடிவு செய்து கால அவகாசம் அளித்தது.
கால அவகாசம் முடிந்துள்ள நிலையில் ஒன்றரை லட்சம் இந்தியர்கள் உட்பட சுமார் 10 லட்சம் வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட உள்ளனர். அதில் சுமார் 20,000த்துக்கும் மேற்பட்ட தமிழர்களும் அடங்குவர்.
உள்நாட்டில் வேலையில்லாத காரணத்தினால் பிழைப்புத் தேடி, ஏஜெண்டுகளுக்கு பல லட்சம் ரூபாய் கொடுத்து அங்கு சென்றுள்ள அப்பாவித் தமிழர்கள், தற்போது வேலையும், குடியுரிமையும், குடியிருக்க இடமும் இல்லாமல் சவுதி அரேபியாவில் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவுக்குத் திரும்பி வர பயணச் செலவு கூட செய்ய முடியாமல் நிர்க்கதியாக நின்று தவித்துக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களை உடனடியாகத் தாயகம் திருப்பிக் கொண்டு வர மத்திய அரசும், மாநில அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
ராமதாஸ் கோரிக்கை
இதேபோல் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதி அரேபியாவில் இருந்து ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 281 பேர் தாயகம் திரும்பி உள்ளனர். மீதமுள்ள 12 லட்சம் இந்தியர்களின் வேலைவாய்ப்பு நிலைமை என்ன? என்பது தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதனை உணர்ந்த கேரள அரசு, வெளிநாடு வாழ் மலையாளிகள் விவகாரத்துறை மூலம் சவுதி அரேபியாவுக்கு ஆலோசனை குழுக்களை அனுப்பி, உரிய ஆவணங்கள் இல்லாமல் தவிக்கும் மலையாளிகளை மீட்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோன்று, அங்கு தவிக்கும் தமிழர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications