எதிர்கட்சியினரை கொலை செய்யும் அளவுக்கு திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா? - எடப்பாடி ஆவேசம்!
தூத்துக்குடி: எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவிற்கு திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே கொல்லம்பரம்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்து பாலகிருஷ்ணன். அதிமுகவைச் சேர்ந்த இவர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் ஆவார். முத்து பாலகிருஷ்ணன், அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜூன் 24 ஆம் தேதி முத்து பாலகிருஷ்ணன் தனது பைக்கில் வெளியே சென்றுள்ளார். சந்திரகிரி அருகே, சென்ற போது கல்குவாரியில் கற்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி திடீரென முத்து பாலகிருஷ்ணன் மீது நேருக்கு நேராக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி முத்து பாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஒட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் டிரைவர் சௌந்தரராஜன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த முத்து பாலகிருஷ்ணன் சடலத்தை வாங்க மறுத்து, உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்குவாரிக்கு 650 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்த விவகாரம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் முன்விரோதம் போன்ற காரணங்களுக்காக முத்து பாலகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த திமுகவை சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கருணாகரன் இடையே மோதல் போக்கு நிலவி வந்துள்ளது.
முத்து பாலகிருஷ்ணனை லாரியை ஏற்றிக் கொலை செய்து விடுவேன் என்று தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கருணாகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிரட்டல் விடுத்ததாகவும், அதன்படி அவர் கொலை செய்துவிட்டதாகவும் முத்து பாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
எனவே தற்போதைய பஞ்சாயத்து தலைவரின் கணவர் கருணாகரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காட்டமாக பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், "தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அதிமுக நிர்வாகி முத்துபாலகிருஷ்ணன் அவர்களை, திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கொலைக்கு உள்ளாட்சி தேர்தல் போட்டியும் ஒரு காரணம் என்ன செய்திகள் வருகின்றன. இதையும் "தனிப்பட்ட கொலை" என்ற அளவோடு தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசு கடந்து செல்ல முனையுமா?
திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் என்பது இவர்களின் அராஜகத்திற்கு இடையில் தான் நடைபெறும் என்பது நாடறிந்த உண்மை. ஆனால், அதற்காக, எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவிற்கு திமுக-வினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?
சட்டம் ஒழுங்கை அடியோடு சீர்குலைத்துவிட்டு, அதை தட்டிக் கேட்கும் இடத்தில் இருக்கும் எதிர்க்கட்சியினரின் உயிருக்கே பாதுகாப்பற்ற நிலையில், தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளியுள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
முத்துபாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடர்புள்ள திமுக பிரமுகர் கருணாகரன் உள்ளிட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
தூத்துக்குடியில் பயங்கரம்.. நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. போலீஸ் செய்த அதிரடி சம்பவம்












Click it and Unblock the Notifications