ஈரோடு அருகே தனியார் கல்லூரி நிர்வாகி கார் மோதி 2 பேர் பரிதாப பலி
இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
ஈரோடு: ஈரோடு அருகே கல்லூரி நிர்வாகி கார் மோதியதில் பால் நிறுவன ஊழியர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் காளிமுத்து. தர்மபுரியை சேர்ந்தவர் மணி. இவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள தனியார் பால்பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் இருவரும் கோவை சேலம் நெடுஞ்சாலையை செல்லப்பம்பாளையம் என்ற இடத்தில் கடக்க முயற்சித்துள்ளனர். அப்போது அவ்வழியே வந்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த கல்லூரி நிர்வாகியின் கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக சித்தோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலை விபத்தில் ஊழியர் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications