ஈரோட்டில் 2 கல்லூரிகளில் பொறியியல் விண்ணப்பங்கள் விநியோகம்!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சிக்கய்யநாயக்கர் கல்லூரியிலும், சித்தோட்டில் உள்ள ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரியிலும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப மனுக்கள் வழங்கப்படுகிறது.
தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று முதல் நாள் என்பதால் விண்ணப்ப மனுக்களை வாங்குவதற்கு மாணவ-மாணவிகள் அதிகம் வரவில்லையாம்.
எனினும், நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி எவ்வளவு மார்க் பெற்று உள்ளோம் என்பதை தெரிந்து கொண்ட பிறகு பொறியியல் விண்ணப்ப மனுக்கள் விற்பனை சூடு பிடிக்கும் என்றும் கல்விதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications