சிறுமியை பலாக்காரம் செய்த பூசாரி உள்ளிட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை
ஈரோடு: ஈரோட்டில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பூசாரி உள்ளிட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி முத்துபாவா. இவரது நண்பர் ஆந்திரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் வாசிம் அக்ரம். கடன் தொல்லையால் அவதிப்படும் தனது உறவினருக்காக மாந்திரிக பூஜை செய்ய கடந்த 2014இல் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த பூசாரி சரவணன் என்பவரை முத்துபாவா ஈரோட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, சரவணன், முத்துபாவா வீட்டில் தங்கி மாந்திரிக பூஜை செய்து வந்துள்ளார். அப்போது, முத்துபாவா உறவினரான 17 வயதுச் சிறுமிக்கும், சரவணனுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்தச் சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய சரவணன், முத்துபாவா, வாசிம் அக்ரம் ஆகியோர் துணையுடன் அவரை புதுக்கோட்டைக்கும் பின் ஆந்திரத்துக்கும் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இந்நிலையில், தன் மகள் கடத்தப்பட்டது குறித்து அச்சிறுமியின் தந்தை, ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆந்திர மாநிலம் சென்று சிறுமியை மீட்டதோடு, சரவணன், முத்துபாவா, வாசிம் அக்ரம் ஆகியோரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சரவணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும், முத்துபாவா, வாசிம் அக்ரம் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையுடன் தலா ரூபாய் 1,000 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி திருநாவுக்கரசு செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications