Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் வந்த செங்கோட்டையன்.. ஈரோடு மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் பயோடேட்டா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது. சீனியரான கே.ஏ.செங்கோட்டையன் இதில் முக்கியமானவர்.

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 8 தொகுதிகள் உள்ளன. இந்த எட்டு தொகுதிகளிலும் அதிமுக தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

எட்டு தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் குறித்த சுய விவரம்.

கோபி: கே.ஏ.செங்கோட்டையன்

கோபி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன்கே.ஏ.செங்கோட்டையன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் கோபி அருகே குள்ளம்பாளையத்தில் 9.1.1948-இல் பிறந்தார். இவரது தந்தை கே.எஸ்.அர்த்தனாரி கவுண்டர். செங்கோட்டையன் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்துள்ளார். இவரது மனைவி ஈஸ்வரி, மகன் கதிரீஸ்வரன். இவர் முதன்முதலாக சத்தியமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் 1977-ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1989-ஆம் ஆண்டு அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது, ஜெயலலிதா அணியில் இருந்த இவர் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர், குள்ளம்பாளையம் ஊராட்சித் தலைவர், ஈரோடு மாவட்ட அதிமுக செயலாளர், அதிமுக தலைமை நிலையச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். 2011-இல் வேளாண்மைத் துறை அமைச்சராகவும், தகவல் தொழில்நுட்ப அமைச்சராகவும், வருவாய்த் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொடக்குறிச்சி: வி.பி.சிவசுப்பிரமணி

மொடக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளராக ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வி.பி.சிவசுப்பிரமணிவி.பி.சிவசுப்பிரமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

மொடக்குறிச்சி ஒன்றியம், துய்யம்பூந்துறை கிராமம், 51வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வி.பி.சிவசுப்பிரமணி (56). இவர், கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், ஸ்ரீபிரதீப் என்ற மகனும் உள்ளனர். இவர், 1983-இல் அதிமுகவில் இணைந்தார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தவர். 1984-ஆம் ஆண்டு முதல் 51 வேலம்பாளையம் கிளை கழகச் செயலாளராகவும், 2006 முதல் மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஈரோடு மாநகர் மாவட்ட கழகச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். தற்போது மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராக உள்ளார்.

அந்தியூர்: ஈ.எம்.ஆர்.ராஜா

அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக ஈ.எம்.ஆர்.ராஜாஈ.எம்.ஆர்.ராஜா (எ) ராஜாகிருஷ்ணன் (49) அறிவிக்கப்பட்டுள்ளார்.

எம்.ஏ படித்துள்ள இவர் விவசாயம் மற்றும் சுயதொழில் செய்து வருகிறார். கொங்கு வேளாளர் இனத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி தீபா, மகள்கள் ஈ.ஆர்.ஸ்ரீநிவேதா, ஆர்.மிதுளாஸ்ரீ. 1986-இல் கட்சியில் இணைந்த இவர், கிளைச் செயலாளர், 1998-இல் அந்தியூர் ஒன்றிய ஜெ. பேரவை இணைச் செயலாளர், 2000-இல் அந்தியூர் ஒன்றியச் செயலாளராகப் பதவி வகித்துள்ளார். 2001 மற்றும் 2006-இல் அந்தியூர் ஒன்றியக் குழுத் தலைவராகப் பதவி வகித்துள்ளார். தற்போது, ஈரோடு புறநகர் மாவட்ட ஜெ. பேரவைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

பவானிசாகர் (தனி): எஸ்.ஈஸ்வரன்

பவானிசாகர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக எஸ்.ஈஸ்வரன்எஸ்.ஈஸ்வரன் (39) அறிவிக்கப்பட்டுள்ளார்.

பி.காம் பட்டதாரியான இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். தந்தை பெயர் என்.சுப்பன். பனையம்பள்ளியை சொந்த ஊராகக் கொண்ட இவருக்கு திருமணமாகவில்லை. தற்போது, பனையம்பள்ளி ஊராட்சித் தலைவராக உள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராக உள்ளார். மேலும், பவானிசாகர் ஒன்றிய மாணவரணிச் செயலாளராகவும், கிளை மேலவைப் பிரதிநிதியாகவும் உள்ளார்.

ஈரோடு மேற்கு: கே.வி. ராமலிங்கம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கள்ளிவலசு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கட்சி உறுப்பினர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக தாராபுரம் ஒன்றியச் செயலர், 2003 முதல் 2008 வரை ஈரோடு மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர், 2008 முதல் 2013 வரை ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலர், 2010-இல் ராஜ்யசபா உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்து வந்தார். கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த இவர், 2011இல் ஈரோடு மேற்குத் தொகுதியில் வெற்றி பெற்று தற்போது எம்.எல்.ஏவாக இருக்கிறார். பொதுப் பணித் துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

பெருந்துறை: தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்என்.டி.வெங்கடாச்சலம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பெருந்துறை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பி.ஏ. பட்டதாரி. கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். மனைவி பெயர் வி.மாதேஸ்வரி, மகன் பெயர் டி.வி.திவாகர்சக்திவேலன். கட்சியில், 1980 ஆம் ஆண்டு முதல் உறுப்பினராக உள்ளார். பெருந்துறை தொகுதி அண்ணா தொழிற்சங்கத் தலைவர், பெருந்துறை பேரூர் செயலாளராக இருமுறையும், பெருந்துறை ஒன்றியச் செயலாளராக இருமுறையும், ஈரோடு வடக்கு மாவட்ட ஜெ.பேரவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது, ஈரோடு புறநர் மாவட்டச் செயலாளராக உள்ளார். தமிழக சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவர், தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக உள்ளார்.

ஈரோடு கிழக்கு: கே.எஸ்.தென்னரசு

ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கருங்கல்பாளையம் சொக்காய்த்தோட்டம் பகுதியைச் சேர்ந்த தென்னரசு 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ-வாகப் பதவி வகித்து வந்தார். இவருக்கு பத்மினி என்ற மனைவியும், கலையரசன், கலைவாணி என்ற மகன், மகள் உள்ளனர். சொந்தமாக பிரிண்டிங் மில்லும், பெட்ரோல் பங்க்கும் வைத்து நடத்தி வருகின்றனர். 1972-ஆம் ஆண்டு முதல் அடிப்படை உறுப்பினராக இருந்து வரும் தென்னரசு 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை ஈரோடு எம்எல்ஏ-வாகவும் 2010 முதல் 2011-ஆம் ஆண்டு வரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றத் தலைவராகவும், 2011 முதல் இதுவரை ஈரோடு கிழக்குத் தொகுதிச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

பவானி: கே.சி.கருப்பணன்

பவானி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக பவானி நகர்மன்றத் தலைவர் கே.சி.கருப்பணன்கே.சி.கருப்பணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், விவசாயம் மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். கொங்கு வேளாளர் இனத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி தேவி, மகன் கே.யுவராஜா. பதவிகள்: 1972-இல் கவுந்தப்பாடியை அடுத்த காட்டுவலசு கிளைச் செயலாளர். 1994-இல் பவானி ஒன்றிய அவைத் தலைவர். 1999-இல் பவானி ஒன்றியச் செயலாளர். 2001-ஆம் ஆண்டு முதல் 2006 வரை பவானி தொகுதி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர். 2006-இல் மீண்டும் அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பவானி தொகுதி அதிமுக சட்டப்பேரவைத் தொகுதிச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் இவர் பவானி நகர்மன்றத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+