12 பேரை பலி கொண்ட குரங்கணி காட்டுத் தீ.. ட்ரெக்கிங் ஏஜென்ட் கைது
குரங்கணி காட்டுத் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தது தொடர்பாக ட்ரெக்கிங் ஏஜென்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: குரங்கணி காட்டுத் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தது தொடர்பாக ட்ரெக்கிங் ஏஜென்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி ட்ரெக்கிங் சென்ற 12 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் குரங்கணி தீ விபத்து சம்பவம் தொடர்பாக ஈரோட்டை சேர்ந்த டிரெக்கிங் ஏஜெண்ட் பிரபு கைது செய்யப்பட்டார்.
ஈரோட்டில் கைது செய்யப்பட்ட பிரபு, விசாரணைக்காக தேனி அழைத்து செல்லப்படுகிறார். ட்ரெக்கிங் தொடர்பாக சென்னை ட்ரெக்கிங் கிளப் நிறுவனத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications