ஸ்டாலின் பக்கம் 'அழகிரி'யின் எஸ்ஸார் கோபி - அழகிரியால் பல பதவிகளை அனுபவித்தவர் கோபி
மதுரை: மு.க.அழகிரியால் பல பதவிகளை அனுபவித்த அவரது முக்கிய ஆதரவாளர்களில் ஒருவரான எஸ்ஸார் கோபி இன்று திடீரென மு.க.ஸ்டலாலின் பக்கம் தாவி விட்டார்.
அவருடன் 40 பேர் ஸ்டாலினை சந்தித்து அவருக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
லோக்சபா தேர்தலில் திமுகவைத் தோற்கடிக்க அல்லது கடும் பாதிப்பை ஏற்படுத்த பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளார் மு.க.அழகிரி. அவரை பல்வேறு கட்சியினரும் நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.

இந்த நிலையில் அழகிரி ஆதரவாளரான எஸ்ஸார் கோபி தன்னுடன் 40 பேரை கூட்டிக் கொண்டு இன்று சென்னை வந்தார். அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேர்தலில் தாங்கள் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபடுவதாக உறுதியளித்தார்.
எஸ்ஸார் கோபி, அழகிரியின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தவர். அவருக்கும், அவரது தம்பிகளுக்கும் அழகிரி பல பதவிகளை வாங்கிக் கொடுத்து கம்பீரமாக நடை போட வைத்திருந்தார். மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி சேர்மன் பதவி, அவனியாபுரம் நகராட்சி சேர்மன் பதவி, மற்றும் அவனியாபுரம் நகர செயலாளர் பதவி, திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் என பல பதவிகளை இவர்கள் வகித்தனர்.
இத்தனையும் அழகிரியால்தான் இவர்களுக்குக் கிடைத்தன. இந்த நிலையில் அழகிரியை உதறி விட்டு ஸ்டாலின் பக்கம் இவர்கள் போய் விட்டது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications