பேஸ்புக் நட்பு கேடாய் முடிந்தது.. சென்னை லாட்ஜில் இளம் பெண் கொலையான பின்னணி
மயிலாப்பூரிலுள்ள லாட்ஜ் ஒன்றில் பட்டதாரி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது நண்பரையும் மற்றொருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். பேஸ்புக் பழக்கம் கொலையில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: சென்னை, மயிலாப்பூரில் லாட்ஜ் ஒன்றின் அறைக்குள் இளம் பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் பேஸ்புக் நட்புதான் கேடாய் முடிந்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 15ம் தேதி நள்ளிரவில் மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையிலுள்ள லாட்ஜ் ஒன்றின் அறைக்குள் இளம்பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அந்த பெண், மயிலாப்பூர் பி.வி.கோவில் தெருவைச் சேர்ந்த எத்திராஜ் எனும் பழைய பேப்பர் கடை வைத்துள்ளவரின் மகள் என விசாரணையில் தெரியவந்தது.
திருமணமாகாத பட்டதாரி பெண்ணானஸ நிவேதா, வேலை தேடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 14ம் தேதி பகலில் அந்த லாட்ஜில் ரூம் புக் செய்துள்ளார் நிவேதா.
தோழிகள் வர உள்ளதாக கூறி லாட்ஜை அவர் புக் செய்துள்ளார். ஆனால் இரு ஆண்கள்தான் லாட்ஜுக்கு வந்துள்ளனர். அவர்கள் 15ம் தேதி மாலை ரூமிலிருந்து வெளியேறியுள்ளனர். இரவில் நிவேதா சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
நிவேதாவின் கழுத்தில் காயம் இருப்பதால் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு பிறகு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. போலீசார் விசாரணையில் பேஸ்புக் நண்பர் ஒருவருடனான நெருக்கமே நிவேதாவை லாட்ஜில் ரூம் புக் செய்ய தூண்டியுள்ளது, என தெரியவந்துள்ளது.
அந்த நபரை பிடித்தால் உண்மை தெரியும் என கூறப்படுகிறது. பேஸ்புக்கில் பழக்கமான நபரிடம் நிவேதா பிறகு போனிலும் பேசி வந்ததாக கூறப்படுகிறது. பேஸ்புக் நண்பர் பெங்களூரை சேர்ந்தவர் என்பதால் அவரை போலீசார் தேடி பெங்களூர் சென்றுள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications