திண்டுக்கல் அருகே மரணத்திலும் பிரியாத தம்பதியின் உடல்களை பார்த்து கதறி அழுத மக்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் பெண் இறந்துள்ளார்.
திண்டுக்கல் அருகே இருக்கும் ஜம்புலியம்பட்டியில் உள்ள வடக்கு தெருவில் வசித்து வந்தவர் மணி தர்மராஜ்(55). அவருடைய மனைவி பாப்பாத்தி(48). 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான அவர்களுக்கு கனகராஜ் (23) என்ற மகனும், மீனா (21), மாரியம்மாள் (18) என்ற மகள்களும் உள்ளனர்.
கனகராஜ் சென்னையில் தங்கி டிரைவர் வேலை செய்து வருகிறார். மீனா சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக உள்ளார். மாரியம்மாள் திண்டுக்கல்லில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

தர்மராஜ் மற்றும் அவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தர்மராஜ் கடந்த வாரம் தான் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று அவரின் உடல்நலம் மோசமாகி காலை 11.45 மணிக்கு இறந்தார்.
கணவரின் உடலுக்கு அருகே அமர்ந்து அழுது கொண்டிருந்த பாப்பாத்தி பிற்பகல் 3.45 மணிக்கு திடீர் என மயங்கினார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸுக்கு ஊர்க்காரர்கள் தகவல் அளித்தனர். ஆம்புலன்ஸில் வந்த ஊழியர்கள் அவரை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.
கணவர் இறந்த அதிர்ச்சியில் இறந்த பாப்பாத்தியின் உடலை தர்மராஜின் உடலுக்கு அருகே வைத்தனர். மரணத்திலும் பிரியாத தம்பதியை பார்த்து உறவினர்களும், கிராமத்தினரும் கதறி அழுதனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications