ஒரு வருஷமா என்ன செஞ்சீங்க.. சாதனைகளை பட்டியல் போடுங்க.. தமிழிசை சவுந்தரராஜன் பொளேர்!
ஓராண்டில் தமிழக அமைச்சர்கள் தாங்கள் செய்த சாதனைகளை பட்டியலிட வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஓராண்டில் அதிமுக இரண்டாக உடைந்துள்ளது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களின் சாதனை பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டுக்குள் தமிழக மக்கள் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி என மூன்று முதல்வர்களை கண்டுள்ளனர்.
இந்த ஓராண்டில் அதிமுக பல்வேறு சோதனைகளை சந்திதுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவின் மரணம்.

அதிமுக சந்தித்த சரிவுகள்
அதனை தொடர்ந்து கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகள், சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு, சசிகலாவின் சிறைவாசம், கூவத்தூர் கும்மாளம், ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து, வருமான வரித்துறை ரெய்டு, இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் தினகரனுக்கு சிறை, எல்எல்ஏக்களின் மிரட்டல் என அதிமுக அடுத்தடுத்த சரிவுகளை சந்தித்து வருகிறது.

அதிமுக இரண்டாக உடைந்துள்ளது
இந்நிலையில் அதிமுகவின் ஓராண்டு சாதனை குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஓராண்டில் அதிமுக இரண்டாக உடைந்துள்ளது என கூறினார்.

சாதனைகளை பட்டியலிடுங்க
மத்திய அமைச்சர்கள் எப்படி தங்களது மூன்றாண்டு சாதனைகளை தொகுத்து பட்டியலிட்டனரோ, அதேபோல் தமிழக அமைச்சர்களும் தங்களின் சாதனைகளை பட்டியலிட வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.

திமுக அரசியல் ஆதாயம்..
அப்போது தான் தாங்கள் என்னென்ன செய்துள்ளோம் என அமைச்சர்களுக்கு தெரியும். இன்னும் மக்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதும் தெரியவரும் என்றும் தமிழிசை தெரிவித்தார். மேலும் திமுக அரசியல் ஆதாயத்துக்காக விவசாயிகள் பிரச்சனையை கையில் எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications