Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொலை மிரட்டல் வழக்கு... சென்னை கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொலை மிரட்டல் வழக்கில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். ஏற்கனவே அவர் முன் ஜாமீன் பெற்றுள்ளதால், அவரை நீதிபதிகள் செல்லலாம் என அனுமதித்தனர்.

சமீபத்தில் சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசினார். இது தொடர்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக இளங்கோவன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

EVKS Elangovan appears in Egmore court

இது ஒரு புறம் இருக்க, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தொலைபேசி உதவியாளராக இருந்தவர் வளர்மதி (50). இவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 18-ம் தேதி ஒரு புகார் கொடுத்தார்.

அதில், ‘‘காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான காமராஜர் அரங்கத்தில் நான் பணியாற்றியபோது அரங்கம் மற்றும் கடைகளின் வாடகை கணக்கு விவரங்களை கவனித்து வந்தேன். காமராஜர் அரங்கத்தின் மேலாளர் நாராயணன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் சேர்ந்து வாடகை பணத்தை கட்சிக் கணக்கில் சேர்க்காமல் மோசடி செய்வதை கண்டுபிடித்தேன். இதுகுறித்து கேட்டதற்கு, இளங்கோவன் என்னை தரக்குறைவாக பேசினார். அடிக்கவும் முயற்சித்தார். தொடர்ந்து என்னை மிரட்டினார். வேலையில் இருந்தும் நீக்கிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த புகார் மீது விசாரணை நடத்துமாறு தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு அறிவுறுத்தப் பட்டது. இதையடுத்து, உதவி ஆணையர் சிவபாஸ்கர், காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். தாக்க முயற்சித்தல், தரக்குறைவாக பேசுதல், கொலை மிரட்டல், உட்பட 7 பிரிவுகளில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி இளங்கோவனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவர் மதுரையில் தங்கியிருந்து கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான இளங்கோவன், ஜாமீனுக்கான பத்திரத்தைத் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, முன் ஜாமீன் பெற்றுள்ளதால் இளங்கோவன் செல்லலாம் என நீதிபதி உத்தரவிட்டார். இளங்கோவனுக்கு முன் ஜாமீன் பிணைத் தொகையாக இரண்டு பேர் தலா ரூ. 10 ஆயிரம் நீதிமன்றத்தில் செலுத்தினர்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நாளை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி, இளங்கோவன் கையெழுத்துடுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+