பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஜி.கே.வாசனை காங். ஏற்காது: ஈவிகேஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காந்தியை கொன்ற, பெருந்தலைவர் காமராஜை கொல்ல முயன்ற மூதாதையர்களைக் கொண்ட பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை ஒருபோதும் காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளாது என்று தமிழக காங். கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலை சந்தித்து பேசினார்.

EVKS Elangovan attack GK Vasan

இச்சந்திப்பைத் தொடர்ந்து இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் உள்ளிட்டோர் விரைவில் காங்கிரசில் இணைய உள்ளனர். த.மா.கா.,வினர் காங்கிரஸில் இணைவது தாய் வீட்டிற்கு வருவது போன்றது.

ஆனால் ஜி.கே.வாசனை மட்டும் ஏற்க மாட்டோம். காந்தியை கொன்ற, பெருந்தலைவர் காமராஜை கொல்ல முயற்சித்த மூதாதையர்களைக் கொண்ட பா.ஜ.,வுடன் பேச்சுவார்த்தை நடத்தியத அவர் காங்கிரஸில் சேர லாயக்கற்றவர்.

காங்கிரசில் இணையும் தகுதியை அவர் இழந்துவிட்டார். தி.மு.க.,வுடனான தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது. இனிமேல் தொகுதிபங்கீட்டில் மாற்றம் இருக்காது.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+