தமிழ் இசை பாட பெயர் சூட்டினால் தமிழ் வசை பாடுகிறாரே: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
நாகை: பாஜக தலைவர் தமிழ் இசை பாட வேண்டும் என்று பெயர் வைத்தால் அவர் தமிழ் வசை பாடிக் கொண்டிருக்கிறாரே என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைந்த செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,

மாநாடு
வரும் 23ம் தேதி திருச்சியில் காங்கிரஸ் கட்சி மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். அடுத்த ஆண்டு நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த மாநாடு அமையும்.

மோடி
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. மோடி அரசு கடந்த 11 மாதங்களில் என்னென்ன நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது? மோடி வெளிநாடுகளுக்கு செல்லும் செய்தியை விட்டுவிட்டு இந்தியாவில் தங்கும் நாட்கள் பற்றிய விவரங்களை தெரிவித்தால் நல்லது.

தமிழிசை
பாஜக தலைவர் தமிழ் இசை பாட வேண்டும் என்று நினைத்து பெயர் வைத்தார்கள். ஆனால் அவரோ தமிழ் வசை பாடுபவராக உள்ளார்.

காமராஜர் ஆட்சி
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காமராஜர் ஆட்சியை அளிப்போம் என்கிறது சில கட்சிகள். இதன் மூலம் கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அளித்துள்ளது நன்றாகத் தெரிகிறது.

மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாஜகவினர் மவுன சாமியார் என்று கிண்டல் செய்தார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடனே விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்பட்டது, வாட் வரி ரத்து செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் தான் மாணவர்களுக்கு வங்கிகள் கட்டாயமாக கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

காங்கிரஸ்
ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்தக் கோருகிறது பாஜக. நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் அது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே முடியும் என்றார் இளங்கோவன்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications