விஜயதாரணி மீது கோபமில்லை... சட்டசபை காங்கிரஸ் கொறடாவாக நீடிப்பார்- ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: மகளிர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விஜயதாரணி விடுவிக்கப்பட்டாலும் சட்டசபை காங்கிரஸ் கொறடாவாக நீடிப்பார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விஜயதரணி நீக்கப்பட்டது கட்சி மேலிடத்தின் முடிவு என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்த விஜயதரணி எம்.எல்.ஏ வை அதிரடியாக நீக்கிய ராகுல்காந்தி புதிய மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஜான்சிராணியை நியமித்தார். இவர் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எஸ்.பொன்னம்மாளின் பேத்தியாவார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட விஜயதரணி எம்.எல்.ஏ. காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மீது குற்றம் சாட்டினார். அவர் தலைவர் பதவியில் இருக்கும் வரை காங்கிரஸ் வெற்றி பெறாது. அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் கட்சி மேலிடம் தன் மீது நடவடிக்கை எடுத்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
இதுபற்றி கருத்து கூறியுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், என்னைப் பொறுத்தவரை விஜயதரணி மீது எந்தக் கோபமோ,காழ்ப்புணர்ச்சியோ கிடையாது.அவர் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுவார் இதில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றார்.
நடந்தது நடந்ததாக இருக்கட்டும். அவரது கருத்துக்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. மகளிர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் சட்டசபை காங்கிரஸ் கொறடாவாக நீடிப்பார்.
ஜான்சி ராணி அவர்கள்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த பொன்னாம்மாள் அவர்களுடைய பேத்தி,அது மட்டுமல்லாது தலித் வகுப்பை சார்ந்தவர்,படித்தவர், இளம்பெண், தமிழகத்தில் தேர்தல் வரும் நேரத்தில் அவரை தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவராக நியமித்திருப்பது மிக பொறுத்தமான செயல், இதை நான் வரவேற்கிறேன்.அவருக்கு காங்கிரஸ் கட்சி அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும் என்று கூறிய ஈவிகேஎஸ் இளங்கோவன், விஜயதரணி காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினராக இருப்பார், அவரையும் காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக் கொள்ளும் என்று தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications