தலித் நிர்வாகிகளை இழிவாக பேசினார்.... காங். எம்.எல்.ஏ. விஜயதாரணி மீது 'வன்கொடுமை' வழக்கு!!
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் தலித் நிர்வாகிகளை மிக இழிவாக பேசியதாக அக்கட்சி எம்.எல்.ஏ. விஜயதாரணி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் விஜயதாரணி. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் கடந்த வாரம் அவரது ஆதரவாளர்கள் வைத்த பேனரை மற்றொரு தரப்பு கிழித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நேற்று முன்தினம் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவனிடம் விஜயதாரணி புகார் தெரிவிக்க சென்றார். ஆனால் திடீரென இளங்கோவனோ தம்மை பற்றி கேவலமாக பேசினார்; அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் வெளியேற்றும் வரை ஓயப் போவதில்லை என விஜயதாரணி கலகக் குரல் எழுப்பினார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுலுக்கும் அவர் கடிதம் அனுப்பினார். பின்னர் விஜயதாரணியை இழிவாகப் பேசியதாக இளங்கோவன், அவரது ஆதரவாளர்கள் திரவியம், பொன். பாண்டியன், பிரான்லின் ஆகியோர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதனடிப்படையில் இளங்கோவன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே விஜயதாரணி மீது மனோகரி என்ற காங்கிரஸ் நிர்வாகி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் தலித் நிர்வாகிகளை விஜயதாரணி இழிவாகப் பேசுகிறார்.. ஆகையால் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர வேண்டும் என்று அவர் போலீசிடம் முறையிட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனோகரி, சோனியா ராகுல் காந்தி ஆகியோர் தலித்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால் விஜயதாரணியோ ஜாதியை அவமானப்படுத்தி எங்களை கேவலப்படுத்துகிறார்கள். மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருப்பதற்கு விஜயதாரணிக்கு தகுதியே கிடையாது. நான் சொல்லுவதைத்தான் கேட்க வேண்டும் என்கிறார். மேலும் சில வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த என்னை அடிக்க பாய்ந்தார். சாகடித்துப் போட்டுவேன் என்று மிரட்டினார். பொதுவாக சாதியை பற்றி பேசக் கூடாது. அவர்கள் சாதியைப் பற்றி பேசியதால் புகார் செய்தேன் என்றார்.
தற்போது விஜயதாரணி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு பேனர் விவகாரம் பிரளயமாக வெடித்துள்ளதே...
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications