ஹெச். ராஜா தமிழகத்தில் நடமாடவே முடியாது: ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் எச்சரிக்கை
எச்.ராஜா நாவடக்கம் இல்லாமல் பேசுவதாக தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி: எச்.ராஜா நாவடக்கம் இல்லாமல் பேசுவதாக தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்று எச்.ராஜா பேசிக்கொண்டிருந்தால் தமிழகத்தில் நடமாட முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
துடுக்கான கருத்துகளை கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா. அண்மையில் நிருபர்களை தேசத்துரோகி, என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வெள்ளக்காரி, இத்தாலிக்காரி என வசை மாரி பொழிந்தார்.
இது தமிழக காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் எச்.ராஜாவின் கொடும்பாவி தீ வைத்து எரிக்கப்பட்டது.

அய்யாக்கண்ணுவை ஒருகை பார்ப்பவர்
விவசாயிகள் குறித்தும் அவ்வப்போது சர்ச்சைக் கருத்துகளை கூறி வருபவர் எச்.ராஜா. குறிப்பாக டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணுவை உண்டு இல்லை என பார்ப்பவர்.

அப்சல் குருவுடன் தொடர்பு
தற்போது அய்யாக்கண்ணு மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். அதாவது, அய்யாக்கண்ணுவுக்கும் அப்சல்குரு குழுவுக்கும் என்ன தொடர்பு என்பதை தமிழக முதல்வர் உடனடியாக விசாரிக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் அய்யாக்கண்ணுவை கைது செய்து விசாரிக்க வேண்டிய முறைப்படி விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

எச்.ராஜாவுக்கு நாவடக்கம் இல்லை
இது விவசாயிகள் மட்டுமின்றி தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எச்.ராஜா நாவடக்கம் இல்லாமல் பேசி வருகிறார் என தெரிவித்தார். அவருக்கு நாவடக்கம் தேவை என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நடமாட முடியாது
சோனியா காந்தி குறித்து தவறாக பேசிய அவர், தற்போது 40 நாட்களாக உயிரை பணயம் வைத்து போராட்டம் நடத்தி வந்த அய்யாக்கண்ணுவை தீவிரவாதியுடன் தொடர்பு படுத்தி பேசியுள்ளார். இதுபோல் எச்.ராஜா தொடர்நுது பேசினார் தமிழ்நாட்டில் நடமாட முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியது
ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும் பிரதமர் மோடியையும் இணைத்து ஆபாசமாக பேசினார். இதற்காக அவரது உருவபொம்மையும் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications