மாஜி எம்.எல்.ஏ. ராஜசேகரன், எஸ்.டி. நெடுஞ்செழியனுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கல்தா
சென்னை: திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. திரு. எம். ராஜசேகரன் மற்றும் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தலைவர் திரு. எஸ்.டி. நெடுஞ்செழியன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. திரு. எம். ராஜசேகரன் மற்றும் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தலைவர் திரு. எஸ்.டி. நெடுஞ்செழியன் ஆகிய இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள்.
திருச்சி வடக்கு மாவட்ட பொறுப்பினை திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் திரு. ஜெரோம் ஆரோக்கியராஜ் மற்றும் திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர் திரு. ஆர்.சி. பாபு ஆகியோர் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்கள்.
காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தாம்பரம் நகரமன்ற உறுப்பினர் திரு. வி.ஆர். சிவராமன் அவர்கள் நியமிக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் பேரியக்க நண்பர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஒருங்கிணைந்து கட்சிப் பணியாற்ற அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications