புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு 'ஆப்பு'? சந்திரபிரியங்காவை 'ஷிண்டே'வாக்க கொம்பு சீவும் அந்த பாஜக 'தலை'?
காரைக்கால்: புதுச்சேரி முதல்வர் என்.ஆர். ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சிக்கும் கூட்டணி கட்சியான ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றுள்ள பாஜகவால் ஆபத்து ஏற்படப் போகிறது என எச்சரிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
புதுச்சேரியில் 2021 சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி அமைத்தன. புதுவையின் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் 10 ; பாஜக 6 இடங்களில் வென்றன. அன்று முதலே என்.ஆர். காங்கிரஸுக்கும் ரங்கசாமிக்கும் (ரெங்கசாமி) தலைக்கு மேலே தொங்கும் கத்தியாக பாஜக இருந்து வருகிறது. அமைச்சர்களுக்கான இலாகா தொடங்கி இன்று வரை பெரும் குடைச்சல் கொடுத்து வருகிறது பாஜக.

என்.ஆர்.காங்கிரஸுக்கு குழி: புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சிதான் என்றாலும் எப்படியாவது என்.ஆர். காங்கிரஸை கபளீகரம் செய்வதில்தான் பாஜக கவனமாக் இருக்கிறது. முதல்வர் ரங்கசாமியை சுதந்திரமாக செயல்பட விடாமல் முடக்குவதில்தான் பாஜக தரப்பு முழு முனைப்போடு இருக்கிறது என்பது நீண்டகால குற்றச்சாட்டு.
பாஜக பார்முலா: பாஜகவைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, பீகார் என எந்த ஒரு மாநிலத்திலும் கூட்டணி கட்சியை நிம்மதியாக இருக்கவிட்டதில்லை. அப்படியான அரசியல் கொள்கையை கொண்ட பாஜகவுக்கு புதுவை எம்மாத்திரம்? என்பதையே அடுத்தடுத்த நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
சந்திரபிரியங்கா ராஜினாமா: தற்போது, புதுவை அமைச்சரவையில் இருந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா ராஜினாமா செய்துள்ளார். முதல்வர் ரங்கசாமியின் நெடுநாள் அரசியல் சகாவான சந்திரகாசுவின் மகள்தான் சந்திரபிரியங்கா. காரைக்காலை சேர்ந்த சந்திரபிரியங்காவை நண்பரின் மகள் என்பதால் சொந்த மகளைப் போல கட்சியிலும் ஆட்சியிலும் நடத்தினார். இதனாலேயே 40 ஆண்டுகளுக்குப் பின்னர் புதுவை ஒரு பெண் அமைச்சரையும் பார்த்தது. சந்திரபிரியங்காவும் சமூக வலைதளங்களில் ரொம்ப ஆக்டிவ்வாக செயல்பட்டு தமது இருப்பை வெளிப்படுத்தி வந்தார். தற்போது திடீரென சந்திரபிரியங்கா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்பது ஆச்சரியமும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பி விவாதங்களை கிளப்பிவிட்டுள்ளது.
சந்திரபிரியங்கா, தமிழிசை சவுந்தரராஜன்: சந்திரபிரியங்கா தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கடிதத்தில், தலித் பெண் என்பதால் தம் மீது பாகுபாடு காட்டப்படுவதாக கடுமையான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருக்கிறார். ஆனால் புதுச்சேரி ஆளுநர் பொறுப்பை கூடுதலாக வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜனோ, சந்திரபிரியங்காவின் அமைச்சரவை செயல்பாடுகளில் முதல்வர் ரங்கசாமி அதிருப்தியில் இருந்தார். அவரை நீக்கும் முடிவில் இருந்தார் என இன்னொரு விவகாரத்தை சொல்கிறார். இப்போது சந்திர பிரியங்காவின் அமைச்சர் பதவியை தமக்கு தர வேண்டும் என காரைக்கால் திருமாறன் முட்டி மோதுகிறார்.
பாஜக நினைத்தாலே அரசு கவிழும்: சரி இதில் எங்கேயப்பா பாஜகவின் ரோல் என்கிறீர்களா? சந்திர பிரியங்காவின் ராஜினாமா குறித்து புதுச்சேரி அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது நமக்கு கிடைத்த தகவல்கள்: புதுச்சேரியில் பாஜகவுக்கு 6 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்; சுயேட்சைகள் 6 பேர் உள்ளனர். இந்த கூட்டல் என்பது ரங்கசாமி வசம் உள்ள 10 எம்.எல்.ஏக்களைவிட அதிகம். அதனால் பாஜக நினைத்தாலே போதும்.. ரங்கசாமி ஆட்சி கவிழ்ந்துவிடும். ஆனால் தற்போது அதனை செய்ய விரும்பவில்லையாம் பாஜக.
ஷிண்டேவாக கொம்பு சீவும் பாஜக: ரங்கசாமி கட்சிக்குள் கலகம் ஏற்பட்டு அந்த கட்சியே சிதைந்து போய் இயல்பாகவே பாஜக ஆட்சி அமைக்கும் நிலைமை உருவாக வேண்டும் என காத்திருக்கிறதாம். இதுதான் பாஜக ஆண்டாண்டு காலமாக கடைபிடித்து வரும் பார்முலா. அமைச்சராக பதவியேற்றது முதலே டெல்லி மேலிடத்தின் பிடியில்தான் சந்திரபிரியங்கா இருந்து வந்தாராம். சந்திர பிரியங்கா பத்தோடு பதினொன்று என ஒரு அமைச்சராக இல்லாமல் தம்மை முன்னிலைப்படுத்துவதில் முனைப்பு காட்டி இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் முதல்வர் ரங்கசாமியிடம் இருந்து மெல்ல விலகி பாஜகவின் மேலிட வட்டாரங்களில் நெருக்கம் காட்டி இருக்கிறார். சந்திரபிரியங்கா ராஜினாமா விவகாரத்தில் ரங்கசாமிதான் நல்லவர் என பாஜக இப்போது பவ்யாமாக பேசுவது எல்லாமே நடிப்பு. ஏனெனில் சந்திரபிரியங்காவை புதுவையின் ஏக்நாத் ஷிண்டேவாக கொம்பு சீவிக் கொண்டிருப்பதும் இப்போது அவரை விமர்சிப்பதாக நாடகமாடும் பாஜக 'தலைகள்' என கண் சிமிட்டுகின்றனர். ஆக இப்போதைக்கு ரங்கசாமியின் 10 எம்.எல்.ஏக்களில் ஒரு எம்.எல்.ஏ. பாஜகவுக்கு ஆதரவாக நிற்கிறார்.. இந்த ஆட்டம் 20/20 மேட்சா? டெஸ்ட் மேட்சா? என்பது விரைவில் தெரியும் என்கின்றன புதுவை அரசியல் வட்டாரங்கள்.
-
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
அமமுக களமிறங்கும் 11 தொகுதிகள் இதுதான்.. கேஎன் நேரு உள்பட 3 அமைச்சர்கள் + சீமானை எதிர்த்து போட்டி -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம்












Click it and Unblock the Notifications