2 அணிகளும் இணையும் வாய்ப்பே இல்லை.. முன்னாள் எம்பி ரித்தீஷ் திட்டவட்டம்
சென்னை: பிளவுபட்டுள்ள அதிமுக அணிகள் இணையும் சாத்தியம் இல்லை என்று முன்னாள் எம்பி ரித்தீஷ் கூறினார்.
சென்னை பெசண்ட் நகரில் உள்ள டிடிவி தினகரனை முன்னாள் எம்பி ரித்தீஷ் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

எப்போதும் போல் நாங்கள் தினகரனை பார்க்க வந்தோம். பேசினோம். அவ்வளவுதான். மற்றபடி எது குறித்தும் நாங்கள் பேசவில்லை. அதிமுக அலுவலகத்திற்கு தினகரன் செல்வது குறித்து இதுவரை இன்னும் முடிவெடுக்கவில்லை.
60 நாள் கெடு முடிந்துவிட்ட நிலையில், இனிதான் என்ன செய்வது என்று தினகரன் முடிவு செய்வார். பின்னர் அறிவிப்பார். கட்சி காப்பாற்றப்பட வேண்டும். ஆட்சி நல்ல முறையில் நடந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கட்சி சற்று தொய்வில் இருக்கிறது. அது சிறப்பாக நடக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம்.
கட்சி பலமாகத்தான் இருக்கிறது. ஆனால் தலைமை இல்லாமல்தான் தொண்டர்கள் தவித்து வருகின்றனர். அதனால் தினகரன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பொதுச் செயலாளர் சசிகலா சிறையில் இருப்பதால் தினகரன்தான் தலைமையாக இருந்து செயல்பட வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர்.
தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் இணைவதற்கான சாத்தியம் தெரியவில்லை. இணைந்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் அனைவரின் விருப்பம் என்று ரித்தீஷ் கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications