பூண்டி ஏரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு-மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை
சென்னை: சென்னையில் இடைவிடாது கொட்டிய மழையால் நிரம்பி வழியும் பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூண்டி ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரிக்கான தற்போதைய நீர் வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இதனை அடுத்து ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு 7,150 கன அடியில் இருந்து 10,200 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதே போன்று, சாத்தனூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படுவதால் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications