விரைவில் ஒன்றுபட்ட அதிமுக.. எடப்பாடியார் பரபர பேச்சு!
விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது,விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவை பார்க்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
பிளவுபட்டுள்ள அதிமுக ஒன்றாக இணைந்தால் மட்டுமே இரட்டை இலை சின்னத்தையும், மீட்க முடியும் என்பது இரு அணி தலைவர்களுக்குத் தெரியும். தொண்டர்களும் அணிகள் இணையவேண்டும் என்றுதான் விரும்புகின்றனர்.

ஆனால், எங்கள் நிபந்தனைகள் நிறைவேற்றப்படாத வரைக்கும் அதிமுகவின் பிரிந்த அணிகள் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்று அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் நிர்வாகிகள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுகவைச் சேர்ந்த 250 பேர் என் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
நீர் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்றுள்ளார்.
போதிய மழை இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குடிநீருக்கு தேவையான நிதி ஒதுக்கி, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் தடுப்பணைகள் கட்ட ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இரட்டை இலை சின்னத்தை மீட்கும் வகையில் அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications