கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜின் விருப்ப ஓய்வு சர்ச்சை.. காவல்துறை விளக்கம்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜின் விருப்ப ஓய்வு குறித்து வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் விருப்ப ஓய்வு கேட்டு உள்துறை செயலாளர் அமுதாவிற்கு கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து சில செய்திகள் பரவிய நிலையில் அதனை காவல்துறை மறுத்துள்ளது.

Explanation regarding voluntary retirement of Kallakurichi District Superintendent of Police Mohanraj

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பார் மோகன்ராஜ் அவர்கள் கடந்த ஜனவரி 20023 முதல் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவியேற்று இதுநாள் வரை தனது பணியில் சிறப்பாக செயல்பட்டு உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மெச்சதகுந்த வகையில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 1987ம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி என பல்வேறு மாநகரம் மற்றும் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு மற்றும் லஞ்ச ஒழிப்புதுறையில் சிறப்பாக பணியாற்றி வந்தார்.

மேலும் காவல்துறையில் சுமார் 30 வருடங்களாக செம்மையாக பணியாற்றி வருகின்றார்.. அவர் வரும் 31.04.2024 அன்றுடன் ஓய்வு பெற இருந்த நிலையில், பணியினால் முழு திருப்தி அடைந்த காரணத்தினாலும், உடல் நிலையை கருத்தில் கொண்டும் தனது சொந்த சூழ்நிலையின் காரணமாக விருப்ப ஓய்வு கோரி உள்ளார்.

இது சம்மந்தமாக பல்வேறு சமூக ஊடகங்களில் மற்றும் செய்திதாள்களில் உண்மைக்கு மாறான தகலை பரப்பி வருகின்றனர். இச்செய்தியை யாரும் நம்ப வேணடாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது" இவ்வாறு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக சில ஊடகங்களில் வெளியான செய்தியில், திமுக எம்எல்ஏக்களின் தலையீடு இருந்ததால் எஸ்பி மோகன்ராஜ் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும், ரிஷிவந்தியம், சங்கராபுரம் பகுதியில் கள்ளச்சாராயத்தை தடுக்க முடியவில்லை என்று காவலர்களை கடிந்து கொண்டதாகவும், மனம் வேதனை அடைந்து ஓய்வு பெற முடிவு செய்ததாகவும் செய்திகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+