சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே வெடிபொருட்கள் கண்டெடுப்பு.. பரபரப்பு.. போலீஸ் தீவிர விசாரணை
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வாசல் அருகே வெடிபொருட்கள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வாசல் அருகே வெடிபொருட்கள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வாசலை ஒட்டியுள்ள பிளாட்பாரத்தில் பேப்பரில் வெடிகுண்டு திரி வெளியே தெரியும்படி ஒரு பார்சல் இருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு மோப்பநாயுடன் வந்த வெடிகுண்டு நிபுணர்கள் பார்சலை பிரித்து ஆய்வு செய்தனர். அதில் பாறைகளை தகர்க்க பயன்படுத்த கூடிய டெட்டனேட்டர் மருந்து குச்சிகள் மற்றும் பட்டாசு திரிகள் என்பது தெரியவந்தது.

மருத்துவமனை வாசலில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு, வெடிபொருட்களை வீசிச்சென்றது யார் என பூக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை வாசலில் வெடிப்பொருட்கள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications