நமச்சிவாயத்தை ஓரம்கட்டி விட்டு முதல்வராக நாராயணசாமி திட்டம்?.. புதுவையில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதாக வந்த செய்திகள் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும், திமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

Eyeing Puducherry CM post?: Explains Narayanasamy

தேர்தல் பிரச்சார நேரத்தில் காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் என்.ஆர். காங்கிரஸை சமாளிக்க பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த நமச்சிவாயம் கடந்த ஜூலை மாதம் 8ம் தேதி புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவர் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டபோதே அவர் தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறப்பட்டது. இந்நிலையில் முதல்வர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான நாராயணசாமி போட்டியிடுவதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து நாராயணசாமியிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில்,

கட்சி தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுபவன் நான். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் யாரை தேர்வு செய்கிறார்களோ அவரே புதுச்சேரி முதல்வர் ஆவார். அவர்களின் முடிவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்படுவோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+