கானாத்தூரில் சிக்கிய டுபாக்கூர் "சிங்கம்".. கோட் சூட்டுடன் வலம் வந்தவரை அள்ளியது போலீஸ்!
ஐபிஎஸ் அதிகாரி போல வேடமணிந்து இளைஞர் ஒருவர் பலரை ஏமாற்றியுள்ளார்.
சென்னை: யாரை நம்புறது.. யாரை நம்பக்கூடாதுன்னே தெரியறது இல்லை.
கிழக்கு கடற்கு கடற்கரை சாலையில் உள்ளது கானாத்தூர் என்ற பகுதி. இங்கு போலீஸ் கட்டிங், நன்றாக ஷேவ் செய்த முகம், கம்பீரமான போலீஸ் உடையுடன் ஒரு இளைஞர் ஊரில் உலா வந்து கொண்டிருப்பதாக கமிஷனர் விஸ்வநாதனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுபற்றி என்ன, ஏதென்று விசாரித்து, அந்த நபர் யார் எனவும் கண்டுபிடியுங்கள் என என போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவினையடுத்து, கிழக்கு கடற்கரை சாலையில் நடவடிக்கையை துவங்கினர் போலீசார். அந்த நபர் யாராக இருக்கும் என்ற தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட ஒருவாரம் அந்த நபருக்காக காத்திருந்தனர். இதற்காக ரகசியமாக ரோந்து பணியில் ஈடுபட்டு அடையாறு முழுக்க சுற்றி சுற்றி வந்தனர். இந்நிலையில், நேற்று இரவும் இதே பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கே ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரில் போலீஸ் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருந்தது.

பாலமணிகண்டனின் லீலை
அந்த காருக்குள் ஒரு இளைஞர் இருந்தார். அவர் ஐபிஎஸ் அதிகாரிகள் யூனிபார்மில் இருக்கவும் போலீசார் பேச்சு கொடுத்தனர். ஆனால் ஆரம்பம் முதலே அந்த இளைஞர் குழப்பமாகவும், முன்னுக்கு பின் முரணாகவும் பதில் சொல்லவும், போலீசார் தீவிரத்திற்குள் இறங்கினர். இப்படி விசாரித்தால் சரியாக இருக்காது என்று கானாத்தூர் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்று விசாரணையை துவங்கினர். அப்போதுதான் பொதுமக்கள் கூறிய நபர் அவர்தான் என தெரியவந்தது. மேலும் அந்த இளைஞர், வியாசர்பாடியை சேர்ந்த 33 வயதுடைய பாலமணிகண்டன் என்பதும், ஐபிஎஸ் அதிகாரி போல உடை அணிந்துகொண்டு பெண்களை ஏமாற்றியவர் என்பதும் தெரியவந்தது.

நகை, பணம் அபேஸ்
முக்கியமாக பேஸ்புக்கில் தன்னை ஐபிஎஸ் அதிகாரி என்று சொல்லிக் கொண்டு பெண்களிடம் நைசாக பேச ஆரம்பிப்பாராம். பின்னர் காதலிப்பது போல பேசி, அந்த பெண்களை நேரில் வரவழைத்து தன்னுடைய அவர்களை பயன்படுத்தி நாசம் செய்ததும், அப்பெண்களின் நகை, பணங்களையும் பிடுங்கி கொண்டு நாசம் செய்து, தன் ஈனபுத்தியை காட்டி வந்துள்ளாராம் இந்த போலி ஐபிஎஸ் அதிகாரி.

கார், லேப்டாப் பறிமுதல்
இதையடுத்து, போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் இளைஞரை கைது செய்ததுடன், அவரிடமிருந்த 2 காஸ்ட்லி செல்போன்கள், லேப்-டாப் போன்றவற்றினையும் கைப்பற்றினர். மேற்கொண்டு அந்த போலி ஐபிஎஸ், என்னென்ன அட்டூழியங்கள் செய்தார், என்னென்ன முறைகேடுகளை அரங்கேற்றியுள்ளார், இந்த உடையை அணிந்துகொண்டு ஜனங்களை ஏமாற்றி பணம் ஏதேனும் பறித்தாரா என்பன போன்ற விவரங்களையெல்லாம் துருவி துருவி விசாரித்து வருகிறார்கள்.

புறத்தோற்றம் மாயம்
அகத்தோற்றத்தை ஆராயாமலும், புரிந்து கொள்ளாமலும் புறத்தோற்றத்தை பார்த்து விழும் மனிதர்களால்தான் இதுபோன்ற முறைகேடுகளும், அநீதிகளும் நடக்கின்றன. ஒருவரின் நடை, உடை, பாவனை, பேச்சு, தோற்றம், இதை வைத்து ஒருவரை எடை போடும் போக்கு களையப்படவேண்டும். புறத்தோற்றம் ஒரு மாயமே.. அது ஒரு கானல் நீரே..
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications