குப்பைத் தொட்டியில் போலி நம்பர் பிளேட்.. கொடநாடு பங்களா காவலாளியை கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதா?
கோத்தகிரி குப்பைத் தொட்டி ஒன்றில் போலி நம்பர் பிளேட் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவின் காவலாளியை கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர
ஊட்டி: கொடநாடு பங்களா காவலாளியை கொன்று விட்டு தப்பிச் சென்ற வாகனத்தின் போலி நம்பர் பிளேட் கோத்தகிரி அருகில் குப்பைத் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மற்றொரு காவலாளி கிஷண்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

5 தனிப்படைகள்
இந்தக் கொலை ஏன் நடைபெற்றது? எதற்காக நடைபெற்றது? இதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரிக்க டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காரில் வந்து கொலை
பொலேரோ காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று காவலாளியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி நம்பர் பிளேட்
இந்நிலையில், கொடாநாடு அருகில் கோத்தகிரி அருகில் குப்பைத் தொட்டி ஒன்றில் போலி நம்பர் பிளேட் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கையுறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை கொடநாடு பங்களா காவலாளியை கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டவையா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தப்பிய குற்றவாளிகள்
கொலையாளிகள் அனைவரும் முகமூடி அணிந்திருந்ததால், அவர்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், அவர்கள் அனைவரும் ஊட்டி வழியாக பெங்களூருக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தியுள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications