குடித்துவிட்டால் இப்படியா மூளை மழுங்கி போயிடும்? .. ஒரு தந்தை செய்த காரியத்தைப் பாருங்க!
குழந்தையை தரையில் தூக்கி அடித்த தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
Recommended Video

திருவாரூர்: குடித்துவிட்டால் ஒருவருக்கு மூளை இப்படியா மழுங்கி போயிடும்? குடியோடு சேர்ந்து ஈவு இரக்கமும் அடியோடு மக்கி போயிடுமா என்ன? குடிகார தகப்பன் செய்த காரியத்தை படிங்க.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வேங்கைபுரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். வயது 28. கூலி தொழிலாளியான இவருக்கு அமுதா என்ற மனைவியும், அவந்திகா என்ற 2 வயது பெண் குழந்தையும் இருக்கிறார்கள். வேலையை முடித்துவிட்டு வேல்முருகன் தினமும் குடித்துவிட்டு வருவாராம். வந்தாலும் சும்மா இருப்பதில்லை. மனைவியுடன் தினமும் சண்டையும், தகராறும்தானாம்.

இதேபோலதான் சம்பவத்தன்றும் வேல்முருகன் தள்ளாடிய நிலையில் வீட்டுக்கு வந்துள்ளார். வழக்கம்போல் பஞ்சாயத்தும் ஆரம்பமாகிவிட்டது.
வாய்வார்த்தை வாக்குவாதமாக மாறி, வாக்குவாதம் தகராறாக மாறி, தகராறு அடிதடி வரை போயிற்று. யாரை அடித்தார் தெரியுமா? இரண்டரை வயது குழந்தையை. எப்படி அடித்தார் தெரியுமா? குழந்தையை தலைகீழாக தூக்கி தரையில் ஓங்கி அடித்து. இந்த சம்பவம் எப்போது நடந்தது தெரியுமா? தந்தையர் தினத்தன்று.
விளையாடி கொண்டிருந்த குழந்தையை தூக்கி அடித்ததில் வீல் என்று குழந்தை அவந்திகா அலற, தாய் அமுதா கதற, குழந்தையின் மண்டை உடைந்து ரத்தம் பொலவென கொட்ட கொட்ட.. பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்து குழந்தையை துக்கி கொண்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினர். முதலுதவிக்கு பின்னர் தஞ்சை அரசு மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சையில் அவந்திகா உள்ளாள்.
குழந்தையை தூக்கி அடித்து ரத்தம் கொட்ட துவங்கிய உடனேயே அந்த பாவி தகப்பன், தப்பி ஓடிவிட்டான். இது தொடர்பாக மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய வேல்முருகனை தேடி வருகின்றனர்.
ஐந்தறிவு உள்ள ஜீவன்களுக்கு கூட இப்படி செய்ய துணிவு வராமல், தன் இனத்தை அன்போடு காக்கும். ஆனால் குடிகார வேல்முருகனுக்கு எப்படித்தான் இதை செய்ய மனம் வந்ததோ? இந்த குடிபோதையால் இன்னும் எத்தனை குடும்பங்கள் நாட்டில் குட்டிச்சுவராக போகிறதோ?
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications